Kallakurichi

News January 19, 2025

ரிஷிவந்தியம் அருகே பைக் விபத்து; வாலிபர் பலி

image

திருக்கோவிலூர் அடுத்த துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (19) . இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் ரிஷிவந்தியம் நோக்கி சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த பைக் அன்பு ஓட்டி வந்த பைக்கின் மீது மோதியதில், அன்பு பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2025

கள்ளக்குறிச்சியில் இருந்து கூடுதலாக 45 பஸ்கள் இயக்கம்

image

பொங்கல் விடுமுறை முடிந்து கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய பணிமனைகளில் இருந்து கூடுதலாக 30 பஸ்களும், 15 தனியார் பஸ்களும் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

ஆற்றுத் திருவிழாவில் குவிந்த கூட்டம்

image

திருக்கோவிலூர் மற்றும் மணலூர்பேட்டையில் ஆண்டுதோறும் தைமாதம் 5ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இன்று ஆற்றுத் திருவிழா இரண்டு இடங்களிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியில் இருந்து பல்வேறு கோவில்களில் வந்து தீர்த்தவாரி நடத்தி அருள்பாலித்தனர். அதோடு சிறு, குறு வியாபாரிகள் பொழுதுபோக்கு கடைகள் அமைத்தால் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

News January 18, 2025

தீர்த்தவாரி நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பேரூராட்சி தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி பெருவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தீர்த்தவாரி பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

News January 18, 2025

ஆற்று திருவிழா பாதுகாப்பு குறித்து எஸ்பி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென் பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜித்சதுர்வேதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். உடன் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவல் உதவி ஆய்வாளர் திருமால் மற்றும் நரசிம்ம ஜோதி தனிப்பிரிவு காவலர்கள் இருந்தனர்.

News January 18, 2025

பொங்கல் பண்டிகை: ரூ.48.66 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தை துணை மேலாண்மை அலுவலர் இசைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த போகி பண்டிகை அன்று 29 ஆயிரத்து 702 டன் மற்றும் 15ம் தேதி 29 ஆயிரத்து 739 டன் என மொத்தம் 48 லட்சத்து 66 ஆயிரத்து 161 ரூபாய்க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.

News January 18, 2025

கிணற்றில் மூழ்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

image

சின்னசேலம் அடுத்த லட்சியம் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர்கள் மணிபாரதி -ராஜவள்ளி தம்பதியினர். இவர்களது மகன் ஹரிகரன் (16) அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 18, 2025

கள்ளக்குறிச்சியில் வழக்கம்போல் மின்விநியோகம்

image

கள்ளக்குறிச்சி மற்றும் எடுத்தவாய் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.18) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News January 17, 2025

நிர்வாக காரணங்களால் மின்தடை ரத்து

image

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக (நாளை) ஜனவரி 18ஆம் தேதி அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாகவும் நாளை வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!