Kallakurichi

News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஜன.24) காலை 10- 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே இவ்வாய்ப்பை வேலை வாய்ப்பற்றோர் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையமா? இருசக்கர வாகனங்கள் நிலையமா?

image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு உள்ளே இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர், வெளியூர் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தத்திற்கு ஒதுக்கப்பட இடத்தில் நிறுத்த முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், டெங்கு தடுப்பு நடவடிக்கை, ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யவும்..

News January 23, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

கனியாமூர் பகுதியில் போலி மருத்துவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் மகிழினி மெடிக்கலில் கச்சிராயபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சிவபிரசாத் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அரசு அனுமதி பெறாமல் மெடிக்கலில் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்த நிலையில், அந்த மெடிக்கலுக்கு சீல் வைத்து மருத்துவ பொருட்களை பறிமுதல் செய்து போலி மருத்துவர் அசோக் என்பவரையும் இன்று கைது செய்தனர்.

News January 23, 2025

காவல்துறையை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசே !!! மாவட்ட காவல் துறையே !!! சட்டவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடு !!! என்ற தலைப்பு வாசகங்களுடன் காவல்துறையினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 23, 2025

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை 24 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் வங்கி,நிதி, வாகன உற்பத்தி,காப்பீடு, சில்லரை விற்பனை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

கள்ளக்குறிச்சியில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

பாலினத்தை கண்டறிந்து கூறிய வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீட்டில், கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் இயந்திரம் மூலமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!