Kallakurichi

News February 7, 2025

சங்கராபுரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நெடுமானூர் கிராமத்தில் நர்மதா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முருகன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனமுடைந்த நர்மதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்மதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 6, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 6.2.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News February 6, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

image

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில் பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் கள்ளக்குறிச்சி மாடர்ன் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் தச்சூரில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் அதிமுக நிர்வாகி கைது

image

ஆத்தூர் அருகே வளையமாதேவி பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே தண்ணீர் பாட்டில் உடன் சேர்த்து சாராயம் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, சாராயம் சப்ளை செய்ததாக வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த அதிமுக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ராஜா என்பவரை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News February 6, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News February 6, 2025

கள்ளக்குறிச்சியில் 14ஆம் தேதி 3வது புத்தகத் திருவிழா

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் வரும் 14ஆம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கி 23ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் சிந்தனைகளை தூண்டும் வகையிலும் பல்வேறு சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இடம் பெற உள்ளன. கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

News February 5, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 5, 2025

எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகார் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

News February 5, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியரிங் டிரைய்னி – 150, மேற்பார்வையாளர் டிரைய்னி – 250 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன. 27 வயது உடைய முதுகலை பட்டம் முடித்தவர்கள் பிப்.28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஏப்.11, 12, 13 தேதிகளில் தேர்வு நடைபெறும். சம்பளம் ரூ.30,000- ரூ.1,60,000 வரை வழங்கப்படும்.<> 1<<>>

News February 4, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!