Kallakurichi

News January 30, 2025

கள்ளக்குறிச்சியில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை கண்டறிந்து தடுத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 30, 2025

முன்னாள் படைவீரர்களுக்கான குறைகேட்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 13 ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்று தங்களது துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விவரிக்க உள்ளனர். சுயதொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News January 30, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (ஜன.31) சேந்தநாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக,கூட்டடி கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிக்குடி, சேந்தநாடு, தொப்பையான்குளம், வைப்பாளையம், களத்தூர், கிருஷ்ணா ரெட்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்கள்

News January 30, 2025

பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை மத்திய காலனி பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாத், பயிற்சி மையத்தின் இயக்குனர், சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

News January 29, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான நலத்திட்ட பணிகள் குறித்தும் அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News January 29, 2025

தவெக மேற்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வெளியான இரண்டாவது பட்டியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளராக பிரகாஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

News January 29, 2025

ஜன.31ம் தேதி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி, வங்கியாளர்கள் உட்பட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகள் தெரிவிக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 29, 2025

சினிமா பட பாணியில் 100 ஆயில் பெட்டிகள் திருட்டு

image

பெரியபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியிலிருந்து கடந்த 5-ம் தேதி பாலசுப்பிரமணியன் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்வாய்புதூர் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு பார்த்தபோது லாரியின் பின்பகுதியில் தார்பாய் கிழிக்கப்பட்டு 100 ஆயில் பெட்டிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து நேற்று (ஜன.28) சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஷேர் செய்யவும்..

News January 29, 2025

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மோ.வன்னஞ்சூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் மோகூர் கிராமத்தை சேர்ந்த பாபு என்பதும், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.3,320 மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News January 28, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!