Kallakurichi

News February 1, 2025

கருப்பு பட்டை அணிந்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார்.

News February 1, 2025

கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு வாரம் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. கோழி வளர்ப்போர் தங்களது கோழிகளை கோழி கழிச்சல் நோயிலிருந்து காப்பாற்ற இம்முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News February 1, 2025

கைவினை திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

கைவினை திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மண்பாண்டங்கள் செய்வோர், சிலை அலங்காரம் செய்வோர், தச்சு வேலை செய்வோர், துணி வெளுப்போர் போன்றவர்கள் கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் கடன் தகுதியானவர்களாவர் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யவும்..

News February 1, 2025

கள்ளச்சாராய வழக்கு; செங்கை கோர்ட்டிற்கு மாற்ற மனு

image

கள்ளச்சாராய வழக்கில் சிபிசிஐடி போலீசார் 24 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2025

சங்கியாக தொடர முடியாது: நாதக மாநில ஒருங்கிணைப்பாளர்

image

தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்பதாலும் சங்கியாக செயல்பட முடியாது என்பதாலும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி கொள்வதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருமான ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார். தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News January 31, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் 

image

 கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்  ஆட்சியர் பிரசாந்த் தலைமையில்  நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து பகுதிகள் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில்  காவல்துறை  சார்ந்த அதிகாரிகள் பல பங்கேற்றனர்.

News January 31, 2025

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ரிஷிவந்தியம் அடுத்த அதையூர் சேர்ந்தவர் முபாரக்அலி (36). பெயிண்டரான இவர் காட்டுஎடையாரில் வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் இருந்த அலுமினியத்தால் ஆன பெயின்ட் ரோலர், அருகில் சென்ற மின்கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். முபாரக்அலியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News January 30, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோழிக்கழிச்சல் தடுப்பு முகாம் கோழி வளர்ப்போரின் பொருளாதார இழப்பைத் தடுக்கும் வகையில் வருகிற 01-02-2025 முதல் 14-02-2025 வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களில் நடத்தப்படவுள்ளது. ஆகவே கோழி வளர்ப்போர் முகாம்களில் கலந்து கொண்டு கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!