India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கூட்டத்தில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு வழிமுறைகள் குறித்து மாவட்ட சுற்றுலா வளர்ச்சி பொதுக்கூட்டம் ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தலைமையில் நேற்று (7.2.2025 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (7.2.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் .
உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததை, கிராம வாசிகள் மற்றும் விவசாயிகள் பார்த்து அதிர்ச்சியில், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி, உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையில் நடைபெற உள்ள இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் விமானம் மூலமாக மும்பைக்கு புறப்பட்டு சென்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE IT
கள்ளக்குறிச்சி மாவட்டம் நெடுமானூர் கிராமத்தில் நர்மதா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முருகன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனமுடைந்த நர்மதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்மதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 6.2.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில் பழகுநராக சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் கள்ளக்குறிச்சி மாடர்ன் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் தச்சூரில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அருகே வளையமாதேவி பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே தண்ணீர் பாட்டில் உடன் சேர்த்து சாராயம் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு, சாராயம் சப்ளை செய்ததாக வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த அதிமுக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ராஜா என்பவரை கச்சிராயபாளையம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.