Kallakurichi

News April 14, 2025

 கள்ளக்குறிச்சியில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி

image

கள்ளக்குறிச்சியில் ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணம், உணவு செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.

News April 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என 100— டயல் செய்யலாம்.

News April 13, 2025

நினைத்தை நிறைவேற்றும் திருக்கோவிலூர் ஆலயம்

image

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இதுவரை வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியும். இந்த புத்தாண்டிற்கு தேவாரம் பாடப்பெற்ற திருக்கோவிலூர் சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

image

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி, காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாய கிணற்றில் மிதக்கும் வாலிபர் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது அல்லது 100— டயல் செய்யலாம்

News April 12, 2025

தோஷம் நீக்கும் பக்தஜனேஸ்வரர் கோயில்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி இன்று. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரில் உள்ளது பக்தஜனேஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் சிவன் சுயம்புவாக காட்சி தரும் நிலையில், இங்கு வந்து வழிபட்டால் எத்தகைய தோஷமாயினும் அது எளிதில் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க…

News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஈரோடு,திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர் நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 12, 2025

ரயில்வேயில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 12, 2025

கள்ளக்குறிச்சியில் அரசு மானியத்தில் திட்டங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு, 90 சதவீத அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.பயனடைய விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நெ.62/56ஏ, தாட்கோ அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம்- 605 602 என்ற அலுவலகத்தில் நேரிலும், 04146 – 259329 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.

error: Content is protected !!