Kallakurichi

News February 27, 2025

கள்ளக்குறிச்சியில் 6 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக உள்ள பாலகுரு சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராகவும், தென்னக ரயில்வே தனி வட்டாட்சியராக உள்ள சரவணன் கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராகவும், சின்னசேலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக உள்ள விஜயன் சங்கராபுரம் வட்டாட்சியராகவும் என 6 பேரை பணியிடை மாற்றம் செய்தூ மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.

News February 27, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள் தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தனிநபர்கள் இடையூறு செய்வதாக புகார் பெறப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News February 27, 2025

நாளை விவசாயிகள் குறைக் கேட்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை விவசாயிகள் குறைக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, ஊழியர்கள் விவசாயிகளுக்கு பதில் அளிக்கின்றனர்.

News February 27, 2025

கள்ளக்குறிச்சியில் சாலை விபத்தில் மேலும் ஒருவர் மரணம்

image

கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று மதியம் மாவட்ட அஞ்சல் துறை அலுவலகம் முன்பு தாய் மற்றும் மகன் விபத்தில் உயிரிழந்த நிலையில் 7.30 மணி அளவில் துருகம் சாலையில் ஆகாஷ் என்ற வாலிபர் ஓட்டி வந்த வாகனமும் மணி என்பவரது இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 26, 2025

தொலைபேசி எண்கள் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி வேளாண்துறை சார்ந்த முக்கிய விவரங்களை அறிய தச்சூரில் அமைந்துள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை 9385819421 என்ற எண்ணின் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலகத்தினை 9385890420 என்ற எண்ணிலும் தேவையான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

9 ஒன்றியங்களின் பொறுப்பாளர்கள் நியமனம்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள 9 ஒன்றியங்களுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மேற்கு முருகன், கிழக்கு ராஜேஷ், சங்கராபுரம் கிழக்கு ரவி, கல்வராயன்மலை மணிமாறன், உளுந்தூர்பேட்டை கிழக்கு சரவணன், மேற்கு கண்ணன் குமாரவேல் ரிஷிவந்தியம் மத்தியம் குழந்தைவேல் திருக்கோவிலூர் தெற்கு செந்தில்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 25, 2025

15 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தொழில் முனைவோர் சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வடக்கநந்தல் மணலூர்பேட்டை, பையத்துந்துறை, எலவனாசூர்கோட்டை, சின்னசேலம் வாணாபுரம், தியாகதுருகம், கொள்ளியூர், காராம்பாளையம், ஈய்யனூர். ஈருடையாம்பட்டு, அசகளத்தூர், கேஆலத்தூர் ஆகிய 15 இடங்களில் பொதுமக்கள் மலிவான விலையில் மருந்துகள் வாங்கி பயனடையும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

News February 25, 2025

மாரடைப்பால் வட்டாட்சியர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியராகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது இவர் குடிமைப் பொருள் வட்டாட்சியர் பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 25, 2025

சுகாரத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சுகாதாரத் துறை திட்டங்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  எம் எஸ் பிரசாந்த் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய சுகாதாரத் துறை திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது

error: Content is protected !!