Kallakurichi

News April 22, 2024

பேருந்தில் இருந்து விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு

image

பெங்களூர் ஜெபின் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், மனைவி சரஸ்வதி. இவர் நேற்று வடபொன்பரப்பில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வந்திருந்தார். மீண்டும் பெங்களூருக்கு செல்ல நேற்று காலை வடபொன்பரப்பி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது பஸ் வேகமாக சென்றதில் நிலை தடுமாறி சரஸ்வதி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 21, 2024

கள்ளக்குறிச்சி: அரசு மரியாதை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த த.பெரியசாமியின் உடல் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் லூர்துசாமி இன்று (21.04.2024) எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள அன்னாரது வீட்டிற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

News April 20, 2024

தேர்தல் ரிசர்வ் ஆபிஸர்கள் திடீர் போராட்டம்

image

சங்கராபுரம் ஜெயம் பள்ளியில் தேர்தல் பணிக்காக தங்க வைக்கப்பட்ட ரிசர்வ் ஆபீசர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு டீ காபி மற்றும் உணவு தரவில்லை எனவும் – தேர்தல் பணிக்கு வந்த தங்களுக்கு சம்பளம் வழங்கப்பட முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறி இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

News April 19, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்காண வாக்கு எண்ணும் மையம் சின்னசேலம் அருகே உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் திஷா மிட்டல் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா உடன் இருந்தார்.

News April 19, 2024

டாஸ்மாக் கடைகள் மூடல் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 21ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், வரும் மே 1ம் தேதி மே தினமும் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், மூடப்பட வேண்டும். அன்றயை தினங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் டாஸ்மாக் மதுபான கடைகளில் மேற்பார்வையார்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 19, 2024

கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குப்பதிவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6:00 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 75.67% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2024

தேர்தல் புறக்கணிப்பு கருப்பு கொடி போராட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தருதல் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு மனைப்பட்டா வழங்காததை கண்டித்தும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி ஏந்தி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது.

News April 19, 2024

“மாவட்டத்தில் 1272 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு”

image

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், சங்கராபுரத்தில் 300 வாக்குச்சாவடி மையங்களும், ரிஷிவந்தியத்தில் 305 வாக்குச்சாவடி மையங்களும், உளுந்தூர்பேட்டையில் 337 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தமாக மாவட்டத்தில் 1274 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 18, 2024

கள்ளக்குறிச்சி: கட்டாயம் வாக்களிக்க அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அனைவரும் கட்டாயமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 18, 2024

கள்ளக்குறிச்சி: உங்கள் பெயர் இருக்கா? இல்லையா?

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள <>https://electoralsearch.eci.gov.in<<>> லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.

error: Content is protected !!