Kallakurichi

News June 24, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில், அகில இந்திய காங்கிரஸின் மௌனம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நட்டா வலியுறுத்தல்.

News June 24, 2024

“ரூ.10 லட்சம் வழங்கியது தீய முன்னுதாரணம்”

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் ரூ.10 லட்சம் வழங்கியது தீய முன்னுதாரணம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார். 100 நாள் வேலைத் திட்டம் இளைஞர்களை சோம்பேறியாக மாறியதாகவும், இங்கு பாதி சம்பளம் பெறுபவர்களே மலிவு விலையில் கிடைப்பதை(சாராயம்) குடித்து மாண்டுள்ளதாகவும் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பேசியுள்ளார்.

News June 24, 2024

சுற்றுலாத் தலமாகும் ‘கல்வராயன் மலை’

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையில், இன்று(ஜூன் 24) திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் அனுமதி பெற்று கல்வராயன் மலையை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

News June 24, 2024

கள்ளக்குறிச்சி: அடுத்தடுத்து 3 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் 15 ஆவது நபராக அறிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வரை 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று(ஜூன் 23) காலை முதல் அடுத்தடுத்து 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர், மெத்தனாலை மலையடிவார பகுதிகளில் பதுக்குவதற்கு சின்னத்துரைக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

News June 24, 2024

சிபிசிஐடி வலையில் சிக்கிய மேலும் 2 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராயம் வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அய்யாசாமி மற்றும் தெய்வாரா என்ற இருவர் கைதாகியுள்ளனர். ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வாரா(27) என்பவரை பிடித்து விசாரித்ததில், பேரல்களில் கொண்டு வரப்பட்ட மெத்தனாலை சிறிய சிறிய கேன்களில் மாற்றுவதற்காக இடவசதி செய்து கொடுத்தது தெரியவந்தது.

News June 23, 2024

நாளை போராட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள,VAS திருமண மண்டபம் அருகில்
நாளை (ஜூன். 24) காலை 9.00 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு தலைமை தாங்கி கண்டன உரையாற்ற உள்ளார். எனவும், இதில், திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என கள்ளக்குறிச்சி அதிமுக
மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

கள்ளக்குறிச்சி காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற பேர் மாயம் என்ற செய்தி பரவி வருகிறது. 7 பேர் சாராய வேட்டை முடித்து ஓய்வுக்காக சிறிது நேரம் அமர்ந்து விட்டு தாமதமாக வந்துள்ளனர். அனைவரும் நலமாக உள்ளதாகவும், தவறான தகவலை பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த கமல்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நடிகர் கமல் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுவரை 57 உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 20 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 23, 2024

அமைச்சர் பதவி விலக வேண்டும்: எல்.முருகன்

image

அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலகுவதன் மூலம் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாத்தை கொடுக்க முடியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய மரணங்களைப் போல, இதுவும் நீர்த்துப்போய்விடக் கூடாது. விசாரணை ஆணையம் அமைத்துவிட்டோம் என்பதோடு இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

error: Content is protected !!