Kallakurichi

News May 11, 2024

கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

image

ஆலத்தூரிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர், ஆர்ச் கேட் பகுதியைச் சேர்ந்த குமார், சக்திவேல் ஆகியோரின் இடத்தில் கட்டப்பட்டதாக கூறி அவர்கள் இருவரும் சேர்ந்து ஜேசிபி மூலம் சுற்றுசுவரை இடித்ததாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட பள்ளியின் தாளாளர் உமாவையும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் இருவர் மீதும் நேற்று போலீசார்வழக்குபதிவு செய்தனர்

News May 10, 2024

கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

கள்ளக்குறிச்சி 32ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 83.7% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 78.34 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 88.85 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

தனியார் பள்ளி மாணவி சாதனை

image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று வெளியான நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் செயல்பட்டு வரும் மவுண்ட் பார்க் பள்ளியில் படித்து வரும் சாய் ஸ்ரீ என்ற மாணவி 496 மதிப்பெண்களை பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இவர் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

News May 10, 2024

மாணவர்களை விட மாணவிகளே அதிகம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 10 ஆயிரத்து 375 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 8597 மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் 82.86% ஆக உள்ளது அதேபோல் 9791 மாணவிகள் தேர்வு எழுதியதில் 8,876 மாணவிகள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதம் 91.6% ஆக உள்ளது. மாணவர்களை விட 8.2% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

News May 10, 2024

34-வது இடத்திற்கு தள்ளப்பட்ட கள்ளக்குறிச்சி

image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 86.83 % மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 34 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

News May 10, 2024

10th RESULT: கள்ளக்குறிச்சியில் 86.83 % தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86.83 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.86 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.06 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

கள்ளக்குறிச்சி: மாணவர் சேர்க்கை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று இளங்கலை (பி.ஏ. தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் ) மற்றும் நான்கு இளம் அறிவியல் (பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் , வேதியியல் மற்றும் இயற்பியல்)பாட பிரிவுகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 6-ம் தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணபிக்க கடைசி நாள் மே 20-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது

News May 9, 2024

கள்ளக்குறிச்சி: குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குடிநீர் குறைதீர் கட்டுப்பாடு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 04151- 222001, 04151-222002 என்ற தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

News May 9, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!