India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அடுத்த வஞ்சரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முகமதியர்பேட்டை கிராம பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் வாகனத்தை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மக்களவைத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களின் மௌன நாடக நிகழ்வு நடைபெற்றது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த முறைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று அவரது உடல் ஏரியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தில் கள்ள சாராய விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று சின்னசேலம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அதே கிராமத்தைச் சேர்ந்த அமராவதி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி, வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் அருகே உள்ள மணிமுக்தா அணையில் மீன் பிடிக்க இன்று சென்றுள்ளார். மீன் வலையில் சிக்கும் மீனை தனது வாயால் எடுக்கும் பழக்கம் கொண்ட செல்லமுத்து நேற்று தன் வலையில் சிக்கிய மீனை வாயால் எடுக்க முயன்ற போது மீன் தொண்டையில் சிக்கியதில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று INDIA கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் தனது தேர்தல் பிரச்சாரத்தை திறந்தவெளி வேனில் நின்றவாறு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் பற்றி பார்ப்போம். இங்கு மலையரசன்(திமுக), குமரகுரு(அதிமுக), தேவதாஸ் உடையார்(பாமக) ஆகியோர் களம் காண்கின்றனர். இந்நிலையில், இத்தொகுதியில் 3 முனை போட்டி நிலவுவதால், யாருக்கு மகுடம் சூட்டும். இத்தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு செயல்பாட்டினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் அசோக் குமார் கார்க் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ் குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல் தலைமையிலான பறக்கும் படையினர் மையனூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய சில குழுவினர், அதிகாரிகளை பார்த்து பொருட்களை விட்டுச் சென்றனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டா, 6 பறவைகளை மீட்டனர்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் பிரச்சார வியூகம் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளையும் முன்னாள் அமைச்சர் மோகன் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.