Kallakurichi

News July 8, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் 518 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 71 மனுக்களும் என மொத்தம் 589 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 7, 2024

கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மர்பினர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார், பேன் கார்டு இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர் உடனடியாக இந்த பணியை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

கல்வி உதவித்தொகை பெற.. ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார், பேன் கார்டு இணைப்பு கட்டயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பெற்றோர் உடனடியாக இந்த பணியை மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News July 6, 2024

வண்டல் மண் தேவையா – ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும்,  மண்பாண்டம் செய்யும் பயன்பாட்டிற்காகவும் தங்கள் கிராமத்தில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார். இதற்காக https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

News July 6, 2024

வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை

image

வேளாண் விரிவாக்க மையங்களில், புதிய மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளும்படி வேளாண் துறை சார்பில்(ஜூலை 5) வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News July 5, 2024

கிறிஸ்தவ தேவாலயம் புனரமைக்க மானியம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சொந்த கட்டிடங்கள் இயங்கும் கிறிஸ்தவ தேவ ஆலயங்களை பழுதுபார்க்க புனரமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை உள்ள ஆலயத்திற்கு ரூ.10 லட்சமும் 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆலயங்களுக்கு ரூ.15 லட்சமும் வழங்கப்படும். நிதி தேவைப்படுவோர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

வாணாபுரம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் வரும் ஜூலை 11ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் அரியலூர், ஏந்தல், பெரியபகண்டை, வாணாபுரம், அவிரியூர், அத்தியூர், பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று (ஜூலை 5) தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

தனியார் இல்லம், விடுதிகளுக்கு உரிமம் பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுதல் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறுவதற்கான படிவங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

செங்கற்கள் தேவை – ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படவுள்ள 3500 வீடுகளுக்கு சுமார் 3 கோடி எண்ணிக்கையில் செங்கற்கள் தேவைப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செங்கற்கள் தயாரிக்கும் நிறுவனம் அல்லது புதிதாக செங்கற்கள் தயாரித்து விநியோகம் செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஜூலை 5) அறிவித்துள்ளார்.

News July 5, 2024

கள்ளச்சாராய விவகாரம் தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் இதுவரை 65 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், எதன் அடிப்படையில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜூலை 5) கேள்வி எழுப்பி உள்ளது.

error: Content is protected !!