Kallakurichi

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: உங்க ஆதார் MISUSE ஆகுதா?

image

<>இங்கு க்ளிக்<<>> செய்து myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள். உங்களுடைய ஆதார் எண் & OTP-ஐ பதிவு செய்து Login செய்யுங்கள். அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் செய்து, ஆதார் பயன்பாட்டு விவரங்களை பெற தேதியை தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

கள்ளக்குறிச்சியில் சோகம் – திடீரென மயங்கி விழுந்து பலி!

image

கள்ளக்குறிச்சி: எ.மழவராயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய். இவர் ஆசனூரில் உள்ள ஆயில் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், அவர் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நேற்று போலீசார் வழக்கு பதிந்தனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சியில் 250 கோழிகள் இலவசம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

image

நயினார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவருடைய மனைவி தவமணி (39) உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில், தன்னை மருத்துவமனை அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் தவமணி கூறியுள்ளார். அவரோ, வங்கிக்கு சென்று வந்தவுடன் கூட்டிச் செல்கிறேன் எனக்கூறி சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தவமணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: பீகார் கொள்ளையர்களால் அதிர்ச்சி!

image

சின்னசேலம்: வெங்கடேசன் (48) என்பவரது வீட்டில் நேற்று முன்தினம், பீகாரைச் சேர்ந்த 3 பேர் வீட்டை உடைத்து திருட முயன்றனர். அங்கு ஏதும் இல்லாத நிலையில், பக்கத்து வீடான காமராஜ் என்பவரது வீட்டின் மொட்டைமாடி வழியாக உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது காமராஜ் மனைவி கூச்சலிட்டதால், 3 பேரும் தப்ப முயன்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: நிறைவேறாத ஆசையால் முதியவர் தற்கொலை!

image

மணலூர்பேட்டையை சேர்ந்த கண்ணன் (68), தனது மகன் ரகோத்தமனிடம் லாரி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகன் அவரது வயதை காரணம் காட்டி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கண்ணன், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 17, 2026

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு முதல் நாளை (ஜன.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 16, 2026

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் கடந்த ஆண்டு பொது தேர்வு தேர்ச்சி சதவீதத்தை இந்த ஆண்டு காலாண்டு அரையாண்டு தேர்வு தேர்ச்சி மதிப்பினை ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

error: Content is protected !!