Kallakurichi

News January 20, 2026

கள்ளக்குறிச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழலாளி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 23ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது எனவும் இதில் பங்கேற்க <>http://www.tnprivatejobs.tn.gov.in/<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதனால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 20, 2026

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News January 20, 2026

கள்ளக்குறிச்சி மக்களே.., அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

கள்ளக்குறிச்சி: டிராஃபிக் போலீஸ் Fine-ஐ Cancel செய்யலாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு <<>>கிளிக் செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

மணலூர்பேட்டை சம்பவம்; இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்!

image

மணலூர்பேட்டை கிராமத்தில் நேற்று(ஜன.19) நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின் போது பலூன்களை நிரப்பும் கேஸ்சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் தி.மலையைச் சேர்ந்த கலா என்பவர் பலியானார். மேலும், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், சிகிச்சை பெறுவோர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

News January 20, 2026

மணலூர்பேட்டை விபத்தில் இறந்தவர் புகைப்படம் வெளியானது!

image

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவின்போது மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே பலூன்களுக்கு நிரப்பப்படும் சிலிண்டர் வெடித்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்த கலாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 20, 2026

கள்ளகுறிச்சி: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! CLICK

image

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

News January 19, 2026

மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் சேவை – ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஜன.21)
புதன்கிழமை முதல், வாரத்தில் மூன்று நாட்கள் புதன், வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அடுத்த மூன்று வாரங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் நிறுத்தப்படும்.இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்

News January 19, 2026

கள்ளக்குறிச்சி:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட BDO எண்கள் இதான்…!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட BDO-க்களின் அலுவலக எண்கள்:
கள்ளக்குறிச்சி – 7402606426
சங்கராபுரம் – 7402606441
உளுந்தூர்பேட்டை – 7402606361
கல்வராயன்மலை – 7402606426
திருநாவலூர்-7402606355
தியாகதுருகம் -7402606345
சின்னசேலம்-7402606430
இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!