India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஸ்.வி பாளையம் ஆற்றங்கரையின் அருகில் இன்று இரண்டு கல்லால் ஆன ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு அடி உயர சிலைகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த சிலைகள் கிராம நிர்வாக அலுவலர் பர்கத்துன்னிசா என்பவரால் கைப்பற்றப்பட்டு சிலைக்கு யாரும் உரிமை கோராத நிலையில் தொடர்ந்து அந்த இரண்டு சிலைகளும் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், நிறைமதி கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், அந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி வேகத்தடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தற்போது திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அப்போது மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஷ்ரவன்குமார் ஜாடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது அவரை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை இணைச் செயலாளராக நியமித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
உளுந்தூர்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையம் அமைக்க அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பகண்டைகூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பகண்டை கூட்ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ள அரியலூரைச் சேர்ந்த பிரகாஷ், குட்கா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, 855 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலூர் ஆகிய மூன்று கிராம பகுதிகளில் விவசாய நிலத்தை தொழிற்சாலைக்கு அக்கிராம விவசாயிகளின் அனுமதியின்றி அதிகாரிகள் அளவீடு செய்வதாக நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவது அறிந்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேரில் சந்தித்து இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் விளக்கம் கேட்டறிந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மூங்கில்துறைபட்டு சார்ந்த 14 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர், அவர்களுக்கு இன்று மூங்கில்துறைப்பட்டில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சத்ய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா மாற்றம், சாலை வசதி என்று மொத்தமாக 567 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று
(15-07-2024) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.