India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 6 பேர் தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி எஸ்எஸ்ஐ ரவிச்சந்திரன் கரியாலூருக்கும், காவலர்கள் ராமதாஸ் கீழ்குப்பத்திற்கும், சீனுவாசன் கள்ளக்குறிச்சிக்கும், சிவமுருகன் வரஞ்சரத்திற்கும், மனோகரன் சி.சேலத்திற்கும், இளந்திரையன் சங்கராபுரத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்திரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷஃபிக் அமர்வு உத்தரவிட்டுள்ளனர். மனுதாரர்கள் அனைவருக்கும் அறிக்கை பதில் மனுக்களை வழங்கவும் அரசு தரப்பிற்கு நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தண்டலை ஊராட்சியில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பிரசாந்திடம் பெண் ஒருவர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தார். அப்பெண்ணின் மனுவினை பரிசீலனை செய்து, உடனடி நடவடிக்கையாக பயிற்சியுடன் கூடிய சுய தொழில் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் வாணாபுரம் பகுதிகளில், தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் எப்படி மக்களிடம் முதல்வர் திட்டம் நடந்ததோ, அதேபோல் முகாமிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதில் முகாமிற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர், இட வசதி, அரசு துறைகளுக்கு அரங்குகள் அமைத்தல் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் நேற்று(ஜூலை 9) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள் உட்பட 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் உள்கோட்டத்தில் பணியாற்றிய போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பரிவிற்கு புதிதாக 34 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நேற்று சின்னசேலம் நண்பர்கள் குழு மற்றும் மகாபாரதி இன்ஜினியரிங் கல்லூரி சார்பில் 29 ஆவது, தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆண்கள் அணி பிரிவில் சின்னசேலம் அணி முதலிடம் பிடித்தது. பெண்கள் பிரிவில் சின்னசேலம் அணி இரண்டாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு மகாபாரதி கல்லூரி தாளாளர் பரிசுகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய வழக்கில் 21 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 11 நபர்களை சிபிசிஐடி விசாரித்த நிலையில் தேவிகன், அரிமுத்து, அய்யாசாமி ஆகியோரின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இந்த 3 பேரையும் நேற்று குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் இந்த 3 பேருக்கும் 20 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் 518 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 71 மனுக்களும் என மொத்தம் 589 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.