Kallakurichi

News July 16, 2024

ஆட்சியரை சந்தித்த எம்எல்ஏ

image

எறஞ்சி, காச்சக்குடி, கூந்தலூர் ஆகிய மூன்று கிராம பகுதிகளில் விவசாய நிலத்தை தொழிற்சாலைக்கு அக்கிராம விவசாயிகளின் அனுமதியின்றி அதிகாரிகள் அளவீடு செய்வதாக நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவது அறிந்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேரில் சந்தித்து இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் விளக்கம் கேட்டறிந்தார்.

News July 16, 2024

சிலம்பத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

image

கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மூங்கில்துறைபட்டு சார்ந்த 14 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர், அவர்களுக்கு இன்று மூங்கில்துறைப்பட்டில் பாராட்டு விழா நடைபெற்றது.

News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

567 கோரிக்கை மனு: ஆட்சியர் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சத்ய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா மாற்றம், சாலை வசதி என்று மொத்தமாக 567 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 15, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று
(15-07-2024) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 15, 2024

காலை உணவுத்திட்டம் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மையனூர் கிராமத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, இருவரும் மாணவர்களுக்கு உணவை ஊட்டி விட்டனர்.

News July 15, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மழை

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் இன்று காலை 10 மணி வரை நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 14, 2024

தினமும் 1,53,000 லிட்டர் பால் கொள்முதல் – கலெக்டர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18,650 பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் தினமும் 1,53,000 லிட்டர் பால் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 68 பால் விற்பனை முகவர்களும் உள்ளனர் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் உறுப்பினர்களை அதிகரித்து, பால் கொள்முதலையும் அதிகரிக்க வேண்டும் என அவர் அதிகாரி கேட்டுக் கொண்டார்.

News July 14, 2024

பாரம்பரிய நெல் இரகங்கள பயன்படுத்த வேண்டுகோள்

image

தமிழக அரசின் பாரம்பரிய மரபு சார் இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் இரகங்கள் தூயமல்லி, செங்கல்பட்டு சிறுமணி, பூங்கார், கருங்குருவை ஆகியவை அரசு விதைப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக்கொண்டார்.

News July 14, 2024

விபத்தில் சிக்கிய மாணவர்களை நலம் விசாரித்த எம்.எல்.ஏ

image

சின்னசேலம் அருகே உள்ள குரால் பிரிவு சாலையில், தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேற்று(ஜூலை 13) சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து, உயர்தர சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!