Kallakurichi

News July 26, 2024

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஏனைய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவு பங்கேற்க தங்கும் வசதியுடன் கூடிய இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் ஜூலை 29 ஆம் தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகும்படி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 25, 2024

2 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் திருநாவலூர் காவல் நிலைய காவலாளர் குமார் ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் இன்று (ஜூலை 25) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News July 25, 2024

ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டறங்கில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சத்துர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News July 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 25, 2024

கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு

image

உளுந்தூர் பேட்டையில் 155 ஏக்கர் பரப்பளவுள்ள கணையாறு ஏரி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கணையாறு ஏரியின் பரப்பளவை அளவீடு செய்து எல்லை வரையரை செய்யவும் வருவாய் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது. காவல்துறை உதவியுடன் ஏரி ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, 12 வாரத்தில் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வரவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News July 25, 2024

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி எம்.பி.

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தியாகதுருகம் நகர செயலாளருமான மலையரசன் நேற்று (ஜூலை 24) டெல்லியில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு முறையான திட்டங்களை அறிவிக்காத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.

News July 25, 2024

கள்ளக்குறிச்சியில் 13 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

image

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 13 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 25, 2024

உழவர் சந்தை காய்கறிகள் விலை விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று உழவர் சந்தையில் காய்கறிகள் கிலோ நிலவரம். தக்காளி ரூ.55, உருளை ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.70 , கத்திரிக்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.80, அவரைக்காய் ரூ.150 , மாம்பழம் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.50, ஆக விற்பனையானது.

News July 24, 2024

தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மத்திய/மாநில அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று, இலவச தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரர்களின் மனைவிகள் கைம்பெண்கள், திருமணமாகாத மகள்கள் உரிய சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி, தங்களது பெயரினை பதிவு செய்து தையல் இயந்திரம் பெறலாம் என ஆட்சியர் பிரசாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

News July 24, 2024

திருக்கோவிலூர் மாணவி மாநில அளவில் சாதனை

image

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த மாதம் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் திருக்கோவிலூர் அங்கவை சங்கவை அரசு மகளிர் பள்ளி பிளஸ் டூ மாணவி இ.சுபஸ்ரீ, மாநில அளவில் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சாந்தி மற்றும் அறிவியல் இயக்கத்தலைவர் ஜி.ஜானகிராமன் ஆகியோர் இன்று பாராட்டினர். மேலும் இந்த மாணவி மாநில அளவில் கல்வி சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

error: Content is protected !!