India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வராயன் மலை பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வை முடித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மீது ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணா நகரைச் சேர்ந்த நட்சத்திரா (14), கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டேக்வாண்டோ பயிற்சி பெற்று வந்தார். தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானார். வெற்றி பெற்ற மாணவிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. அத்துடன் விசாகப்பட்டினத்தில் நடக்கும் போட்டியில் பங்கேற்பதற்கான பயண செலவினை தனியார் அறக்கட்டளை நேற்று வழங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக டி என் பி எஸ் சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கு இலவச முழு மாதிரி தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10 மணி முதல் வார நாட்களில் தொடர்ந்து டேனிஷ் மிஷன் துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சமய்சிங் மீனாவுக்கு, புதிய பணி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய இவர், கடந்த ஜூலை 19ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, தாம்பரம் போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு, உங்கள் கருத்து என்ன?
சங்கராபுரம் காவல் வட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க மூலாம் பூசப்பட்ட போலி நகைகளை காட்டி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்த வட மாநில கொள்ளையர்கள் ஐந்து பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் போலி நகைகளை காட்டி பொதுமக்களிடம் ஏமாற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தகவல் அளித்துள்ளார். மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்களுக்கும் ஒரு வட்டாரத்திற்கு ஒரு வட்டார வள பயிற்றுனர் வீதம் 9 வட்டாரங்களுக்கும் கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் 9 வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், குதிரைச்சந்தல் ஊராட்சியில் ஊரகப்பகுதியில் மக்களுடன் முதல்வர் எனும் திட்டம் தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன்மலையில், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ.பிரசாந்த் உத்தரவின் பெயரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமையில், இன்று அனைத்து பள்ளிகளிலும் (74) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதில் மாவட்ட முதன்மை அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய அலுவலர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மலையில் முகாமிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக பணிபுரிந்து வந்த கணபதி, திருப்பத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, திருச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநராக பணிபுரிந்து வந்த ரமேஷ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.