India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, கள்ளக்குறிச்சியில் உள்ள 4,34,491 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
கீழையூர் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயிலில், பண்டைய கால 6 கல்வெட்டு தூண்கள் நேற்று (ஆகஸ்ட் 3) தென்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில், அவை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜேந்திர சோழனால் கல்வெட்டுகள் ஆகும். அதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில ஊர்களின் பெயர்களும், தானமாக வழங்கப்பட்ட பொன் – பொருள் விவரங்களும் எழுதப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சின்னசேலம் அடுத்த தகரை ஊராட்சியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயசூரியன் தலைமையேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலையில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் குப்புசாமி மனுக்களை பெற்றார். நத்தம், புறம்போக்கு, மந்தவெளி போன்ற இடங்களில் 10 ஆண்டுகள் மேல் குடி இருந்தால் பட்டா வழங்கப்படும் என எம்எல்ஏ கூறினார்.
தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் பங்கேற்கவுள்ள பழங்குடியின இளைஞர்களுக்கு வரும் 10-ஆம் தேதி இணைய வழியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இந்த பயிற்சியில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் இதுவரை கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 124 நபர்களிடம் நேற்றைய தினம் வரை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையாரைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (24). கரும்பு கூலித் தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை காதலித்து கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார், விசாரணை நடத்தி அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணவனை, இழந்த ஏழ்மை நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, நாட்டு கோழிக் குஞ்சுகள் 50% மானியத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்ககுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெண்கள் நம்பிக்கையை தளரவிடாமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆகஸ்ட் 6 ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் சீர்ப்பனந்தல், விளந்தை, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேந்தமங்கலம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் திருப்பெயர், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் சோமண்டார்குடி ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.