India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சின்னசேலம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி அவர்கள் காவல் நிலைய ஆகும்போது பரிந்துரையின் பெயரில் தொடர் சாராய வியாபாரத்தை ஈடுபட்டு வந்த ராஜா கல்லாநத்தம் வெங்கடேசன் காட்டணந்தால் ஆகிய இருவர் மீதும் ஓராண்டு கடுப்பு காவல் சட்டத்தின் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
அண்ணா நகரைச் சேர்ந்த நட்சத்திரா என்ற மாணவி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டேக்வாண்டோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று வீடு நேற்று திரும்பினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி பெருமாள், அவரது இல்லத்தில் தங்க மங்கை நட்சத்திராவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
உளுந்தூர்பேட்டை, ஆசனூர் சிட்கோ துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஆசனூர் சிட்கோ துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எறஞ்சி, காச்சக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், ஆலத்தூர், கச்சிராப்பாளையம், வடக்கனந்தல் பகுதிகளில் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்க பகுதியில் மழை பெய்ததா?
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமண்டார்குடி கிராமத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் 15 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு விதமான கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார் என்பவர் சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்த இராஜி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் அண்மையில் பலருக்கு இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,39,398 பேருக்கு இரத்த அழுத்த நோய், 75,510 பேருக்கு நீரிழிவு நோய், 57,734 பேருக்கு இரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோய், 6,687 பேருக்கு நோய் ஆதரவு சிகிச்சை, 10,153 பேருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் நேற்று (ஆகஸ்ட் 5) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-வை இன்று கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் நேரில் சந்தித்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை அமைக்கப்பட்டு வரும் இரயில்வே வழித்தட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் பாதை அமைக்க வேண்டியும் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.