India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதிரி பாகங்களை இணைத்து சைக்கிள் பிட்டிங் செய்யும் பணிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்பள்ளியில் தயாராகும் இலவச சைக்கிள்கள் வாகனங்கள் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை 20ஆம் தேதி பழைய சிறுவாங்கூர், பாரிக்கல், சீதேவி, காடியார், பொய்க்குணம் கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. முகாமில் 15 துறைகளை சார்ந்த அதிகாரிகள் மனுக்களை பெறுகின்றனர். சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் வாகனங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
கள்ளக்குறிச்சியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் மேகம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் கல்ராயன் மலையின் அடிவாரத்தில் காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியை அடைய மலையேற்றம் செய்ய வேண்டும். நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் உள்ள பாறைப் பிளவுகள் ஆழமாகவும் குறுகலாகவும் இருக்கலாம். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலத்தில் மட்டும் இந்த அருவியில் தண்ணீர் வரும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், இன்று பெய்யவிருக்கும் மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
மூங்கில்துறைப்பட்டு போலீசார் நேற்று பொருவலுார் மோடாங்கல் மலை அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில், காருடன் நின்ற மூவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ஆல்பர்ட், மூங்கில்துறைப்பட்டை சேர்ந்த மேகநாதன், தேவி நகர் முத்தமிழன் என்பதும் மூவரும் வன விலங்குகள், பறவைகளை வேட்டையாட ஏர்கன் துப்பாக்கியுடன் நின்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர்.
எடைக்கல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கிஷோர். இவர் மீது, “விபத்து வாகனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விடுவித்தது” உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பேரில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமை காவலர் கிஷோரை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து நேற்று எஸ்.பி., உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பழைய சிறுவங்கூர் கிராமத்திலும், சங்கராபுரம் ஒன்றியத்தில் பொய்குணம் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் சீதேவி கிராமத்திலும், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் கரடியார் கிராமத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று இரவு 10 மணி வரை கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.