Kallakurichi

News August 22, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; ஒருவர் மரணம் 

image

மடப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. டிரைவரான இவர், டிராக்டர் டிப்பரில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மடப்பட்டு கிராமத்தில் இருந்து கெடிலம் நோக்கி சென்றார். நேற்று செரத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பஸ் டிராக்டர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட குப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News August 22, 2024

கள்ளக்குறிச்சி அருகே நாளை மின்தடை 

image

நாகலூர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நீலமங்கலம், நிறைமதி, முடியனுார் , விருகாவூர், சித்தலுார் , குடியநல்லுார் , வேங்கைவாடி , அசகளத்துார் , பெருவங்கூர், நாகலுார் , கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி,குருர்,மருர்,சாத்தனூர், தண்டலை உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

News August 21, 2024

கேரளா வயநாட்டிற்கு நிவாரண நிதி

image

சின்னசேலத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இளையபெருமாள் அவர்கள் கேரளா வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். இதில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 21, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – ஆட்சியர்

image

வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மதியனூர் கிராமத்திலும், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெரியகுறுக்கை கிராமத்திலும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கோமாளூர் மற்றும் திருப்பாலப்பந்தல் கிராமத்திலும், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசம்பட்டு கிராமத்திலும் ஊரகபகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News August 21, 2024

2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ஆய்வு

image

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, சுடுகாடு மேம்பாடு பணிகள் குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News August 21, 2024

கல்வராயன்மலையில் மருத்துவ வசதி; நீதிமன்றம் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கல்வராயன் மலையில் ஆம்புலன்ஸ் வசதியை உறுதி செய்ய வேண்டும்,சாலை வசதி மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

News August 21, 2024

கள்ளக்குறிச்சி: போலி சிபிஐ அதிகாரி கைது

image

திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரை கடந்த ஜீலை 29-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி எனக் கூறி சுமார் 38 லட்ச ரூபாயைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத் ராவ் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி சைபர் கிரிம் போலீசார் ஆந்திராவிற்கு சென்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது தந்தை, தாய், மனைவி ஆகிய மூவரை தேடிவருகின்றனர்.

News August 21, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; ஒருவர் மரணம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி ஜே ஜேநகர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்ற போது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் ஒட்டிச் சென்ற கார் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத 55 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 21, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சியில் நடத்தபபடவுள்ள முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பிரசாந்த், கள்ளக்குறிச்சியில் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

News August 21, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சங்கராபுரம் ஒன்றியத்தில் புதுப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு கிராமத்திலும், தியாகதுருகம் ஒன்றியத்தில் நாகலூர் கிராமத்திலும், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் நயினார்பாளையத்திலும், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் சிறுவத்தூர் கிராமத்திலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக இன்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!