India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மூங்கில்துறைபட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை (கள்ளக்குறிச்சி-1) க்கு தென்னிந்திய கரும்பு மற்றும் சர்க்கரை தொழில்நுட்ப சங்கம் கூட்டமைப்பின் மூலம் பெங்களூருவில் வெள்ளி விருது வழங்கப்பட்டது. விருதை சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.கண்ணன் பெற்றுக்கொண்டார். கரும்பு அபிவிருத்தி அலுவலர் ராஜேஷ்நாராயணன் , துணைத்தலைமை இரசாயணர் கணேசன், உதவி பொறியாளர் (மின்) சிவக்குமார் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். இதில் 152 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தும் முகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் தமிழ்ச்செம்மல் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய நாட்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதியனூர், நகர், ஆரிநத்தம், குறும்பூர், நாச்சியார்பேட்டை, கூ.கள்ளக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆரிநத்தம் ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்து பயன்பெறலாம் என உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து இன்று சங்கராபுரம் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியில், சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே நீண்ட நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட 2 பெண்கள் கைது செய்து சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விதமான வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பாக பல்வேறு விதமான ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
வடலூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு, குழந்தையை கணவர் கடத்தியதாக நாடகமாடிய தியாகதுருகம் அருகே உள்ள சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை வடலூர் காவல் நிலைய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுவங்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நேருவிடம் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் சுப்ரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்வராயன் மலைப்பகுதியில் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.