India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.முதலமைச்சர் வருகைக்காக 2,200 போலீசார் பாதுகாப்பு.
2. ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.
3.ஈரோட்டில் திருக்குறள் வினாடி-வினா போட்டி.
4. தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை.
5. 50% மானியத்தில் உயிர் உரங்கள்.
6. ஈரோட்டில் களை கட்டிய ஜவுளிசந்தை.
7. ஈரோடு இடைத் தேர்தலில் விஜய் கட்சி போட்டியா?.
ஈரோட்டுக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,000 போலீசாரும், கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 1,200 போலீசாரும் என, மொத்தம் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். களஆய்வின் போது 50,000 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சோலாரில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தும், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான WAY2NEWS-ல் நீங்களும் நிருபர் ஆகலாம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். மேலும், விபரங்களுக்கு 96558-64426 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். மேலும், whats’s app பண்ணலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி கலியானதாக, சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், சட்டப்பேரவை செயலகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2025 பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் விநாடி-வினா போட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் டிச.21 மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. அரசு ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கு பெறலாம். வெற்றி பெறுபவர்கள், டிச.28 விருதுநகரில் நடக்கும், மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் டிச.19 மற்றும் 20ஆம் தேதிகளில் ஈரோடு வருகை தர உள்ளார். இதற்கான ஆய்வுப் பணிகளை கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் நேற்று ஈரோடு அருகில் உள்ள சோலார் பகுதியில் ஆய்வினை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட எஸ்.பி ஜவகர் உடன் இருந்தார். இவ்விழா மேடை மற்றும் பாதுகாப்பு பணிகளை பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.
ஈரோட்டில் நள்ளிரவு ஜவுளிச்சந்தை திங்கட்கிழமை இரவில் கூடுகிறது. இன்று (டிச.16) கூடிய சந்தைக்கு ஏராளமான ஜவுளிக்கடைகள் அமைக்கப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி விற்பனை களைகட்டியது. ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் புத்தாடைகளை விரும்பி வாங்கி சென்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ-வாக இருந்த இளங்கோவன் நேற்று முன் தினம் காலமானார். இந்நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. 2026-ல் சட்டசபை தேர்தலுக்கு முன் நடக்கும் இடைத்தேர்தல் என்பதால், திமுக, அதிமுக, பாஜக இடையே பலத்த போட்டி நிலவும். இத்தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயின் தவெக சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறுப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில், ஆட்சிமொழி சட்ட வாரவிழா டிசம்பர் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே தினமும் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. முதல் நிகழ்வாக டிச.18 முதல் 21 வரை ஈரோடு – சம்பத்நகர் நூலகத்தில், அரசு பணியாளர்களுக்கு குறிப்புகள் எழுதுதல், ஆட்சிமொழி சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.