India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்கின் உருவப்படத்திற்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் திமுக நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. ப.சச்சிதானந்தம் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகள் இருந்தனர்.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் சேலம் சட்டக் கல்லூரியில் இன்று (டிச.28) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், கார் மூலம் சேலம் செல்வதற்காக வந்த அவர் ஈரோடு மாவட்டம் வழியாக சென்றபோது பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வந்த அவருக்கு குருக்கள் பூர்ணாபிஷேக மரியாதை செய்தனர்.
ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் சாதாரணக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலா்கள் கேட்கும்போது ஆவணங்களை கொடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் திமுக கவுன்சிலா்களை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
ஈரோடு பழையபாளையம் பகுதி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோபால் (65), இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அவல்பூந்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது ஈரோடு நாடார் மேடு பகுதியின் அருகே சென்றபோது எதிரே வந்த பொக்லைன் இயந்திரம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கோபால் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளில், ஆகஸ்டு 15 முதல் முதல் டிசம்பர் 12 வரை தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. விவசாயிகளின் கோரிக்கைபடி, டிசம்பர் 13 முதல் டிச.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
சேலத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில், பாஜக நிச்சயம் போட்டியிடும். நாங்களோ அல்லது எங்களது கூட்டணி கட்சியோ தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.
கோபி அருகே, காசிபாளையத்தை சேர்ந்தவர் ராம்கி (34). சரக்கு வேன் வைத்து தொழில் செய்கிறார். வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு, காசிபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேனிற்கு டீசல் நிரப்பி உள்ளார். அங்கு உள்ள குடிநீர் குழாயில், கை கழுவும்போது, அருகே உள்ள கம்பி வேலியில் அவரது கை பட்டுள்ளது. அதில் மின்சாரம் வேலியில் இருந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. இதில் ஈரோடு அடுத்த மேட்டுக்கடை, வேப்பம்பாளையம், நஞ்சனாபுரம், சாணார்பாளையம், ராயபாளையம், தொட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சாரல் மழை பெய்தது. மேலும் மாவட்டத்தில் 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 24 வரை 714.14 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் பொருட்டு புதிய கைப்பேசி எண் 8903167788 முன்னோட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.3 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழாவை முன்னிட்டு, தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, வணிகர் சங்கத்தினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் இல்லையெனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.