India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மக்களே, பெடரல் வங்கியில் (Federal Bank) காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.38,666 முதல் ரூ.55,833 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <

ஈரோடு,தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு வரும் மாா்ச் 2- ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 26- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை 23,307 மாணவ, மாணவிகளும், தனித்தோ்வா்கள் 669 போ் எழுத உள்ளனா். இவா்கள் தோ்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 107 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை 4 மையங்களில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தங்களை அதிகாரிகள் என பொய்க்கூறி ஏமாற்றிய ராஜேஸ்வரன் (42) மற்றும் சென்னியப்பன் (40) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

சத்தியமங்கலம் பெரியூர் பகுதியைச் சேர்ந்த பசுபதியின் மனைவி நித்யா, குடும்பத் தகராறு காரணமாக நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தங்களை அதிகாரிகள் என பொய்க்கூறி ஏமாற்றிய ராஜேஸ்வரன் (42) மற்றும் சென்னியப்பன் (40) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்றபோது கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணமூர்த்தி என்பதும் மானை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.