India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஈரோடு விற்பனைக்குழு பவானி ஒழுங்குமுறை கீழ்கண்ட வேளாண் பொருட்கள் விற்பனைக்கு தேவைப்படுகிறது. 100 கிலோ கம்பு, தினசரி 200 கிலோ கிளிமூக்கு மாங்காய், தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்றவை தேவை உள்ளது என வேளாண்மை துணை இயக்குநர்/செயலாளர், தெரிவித்துள்ளார். கூடுதல் விவரத்திற்கு (99444-47261), (99444-47261) என்ற எண்களை அழைக்கலாம்.
ஈரோடு, பவானி மேட்டூர் சாலை, குட்டை முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 22). டிரைவர். இவர் ஈரோடு பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமி குளிப்பதை, தனது செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார். இதை அறிந்த சிறுமி, பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீதரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோபி நகராட்சியுடன் பாரியூர், மொடச்சூர் வெள்ளாளபாளையம் குள்ளம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகள் இணைத்து, நகராட்சியை விரிவாக்கம் செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு, தமிழக அரசு பரிந்துரைத்து, அரசு ஆணை வெளியிட்டுள்ளது. நகராட்சியில் வழங்கப்படும் வசதிகள், சேவைகள் இந்த ஊராட்சிகளுக்கும் வழங்கப்படும். மேலும் இந்த ஊராட்சிகள் நகராட்சிக்குரிய அனைத்து விதமான நகர்ப்புற பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 2024ம் ஆண்டு, ரயில்களில் அடிபட்டு 84 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 98 உயிரிழந்துள்ளனர். இதில், 71 பேர் அடையாளம் காணப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 10 பேர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களில் ஒரு சிலர், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தேசியத் தலைவர்கள் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்தாண்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜனவரி 8ஆம் தேதி காலை ஈரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால சுன்கரா தெரிவித்துள்ளார், மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசா, ஆசிய ஜோதி தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெறும் என அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நள்ளிரவு 12 மணிக்கு 2024 ஆம் ஆண்டு விடைபெற்று, 2025 ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. கடந்த ஆண்டுக்கு பிரிவு உபசாரம் நடத்தி, புதிய ஆண்டை வரவேற்க, ஈரோடு மக்கள் தயாராகி விட்டனர். அதன் பிரதிபலிப்பாக, பன்னீர்செல்வம் பூங்கா நினைவு தேவாலயம் முன்பு, ஏராளமானவர்கள் கூடி நிற்கின்றனர். இனிய புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இரவு 10 மணியில் இருந்தே, பட்டாசு வெடிக்க மக்கள் தொடங்கிவிட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்யக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு, ஈரோடு மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 60 பேரை, போலீசார் கைது செய்தனர்.
நம்பியூர் அருகே கெட்டிசெவியூர், காளிப்பம்பாளையம் சக்தி நகர் பகுதியில் வசிக்கும், வடிவேலு (56) என்பவருடைய ஆட்டு கொட்டகையில், (ஓலை கொட்டகை) இன்று மாலை, மின் கசிவினால் தீப்பற்றியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நம்பியூர் தீயணைப்பு மீட்பு படையினர், தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறக்கும் புத்தாண்டில் குற்றங்கள் குறையட்டும், பெண்களுக்கான பாதுகாப்பு உருவாகட்டும். அநீதிகளை எதிர்த்து கேட்கின்ற சக்தியை மக்களுக்கு கொடுக்கட்டும். நிம்மதியோடும் அமைதியோடும் மக்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.