India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் இருந்ததும், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகிய பரிசுத்தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அனுமதி பெற்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பவானி ஸ்ரீ சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் இன்று இரவு04.30 மணிக்கு பெருமாள் பரமபத வாசல் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. சரியாக விடியற்காலை 4:30 மணி அளவில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் லட்சுமி தாயாருடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே வர தயார் நிலையில் உள்ளார். பொதுமக்கள் ‘ஓம் நமோ நாராயணா நாராயணா’ என்று கோஷமிட்டபடி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொகுதி வாக்காளர்கள் கடந்த 2021 முதல் ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என தற்போது 5வது முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதன்படி, சட்டமன்ற தேர்தல் – 2021, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 2022, இடைத்தேர்தல் – 2023, நாடாளுமன்றத் தேர்தல் 2024, தற்போது மீண்டும் 5வது முறையாக இடைத்தேர்தல் – 2025 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை அன்று கலெக்டர் தலைமையில் மக்கள் குறைத்தீர் கூட்டம் நடத்தப்படும். பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை வழங்கி தீர்வு காண்பர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படை பயிற்சித் திட்டம் வழங்கப்படுகிறது. இதன்படி தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சிக்கு +12 தேர்ச்சி ஐடிஐ டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் சேர www.tahdco.com இல் பதிவு செய்ய வேண்டும். விபரத்திற்கு ஈரோடு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.5ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிட நாளை (10.1.25) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு 3 நாள் மட்டுமே, அதாவது 10, 13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000 மேல், கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வரும் பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்., சார்பில் திருமகன் ஈவேரா மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரே குடும்பத்துக்கு சீட் கொடுக்க எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மேலும் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் ராஜனும், திமுகவினர் சிலரும் சீட் பெறுவதற்கு காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. இதற்கு முடிவு 2 நாளுக்குள் தெரிந்துவிடும். பிப்.5ல் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல்களை கண்காணிக்க 5 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பறக்கும்படை குழு, 3 நிலையான கண்காணிப்பு குழு, 1 வீடியோ கண்காணிப்பு குழு, 1 வீடியோ பார்க்கும் குழு, 1 கணக்குகள் தணிக்கை குழு உள்ளன. நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டும் ஜன.10 முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.
Sorry, no posts matched your criteria.