India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RK நகர் இடைத்தேர்தலில் பகுதி பொறுப்பாளராகவும், 2019 பாராளுமன்ற தேர்தல் சேலம் தொகுதி பொறுப்பாளராகவும், 2021 சட்டமன்ற தேர்தல் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், 2023 பாராளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளராகவும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் முழுநேர தேர்தல் பணியிலும் வி.சி.சந்திரகுமார் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்த, சில மணி நேரங்களில் தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, பாஜக, நாதக என மும்முனை போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தை திமுக தவறாக பயன்படுத்தும் என்பதால் புறக்கணிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனால், அவருக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று இபிஎஸ்-யிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாராம்.
ஈரோடு, ஈங்கூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் ஜன13ம் தேதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஈரோடு அருகே ஈங்கூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி-பாலக்காடு ரயில் (எண்16843) திருச்சி-ஈரோடு இடையே இயக்கப்படும் என்றனர்.
2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பின் இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. 2011ல் வி.சி.சந்திரகுமார்(தேமுதிக), 2016ல் கே.எஸ்.தென்னரசு(அதிமுக), 2021ல் திருமகன் ஈவெரா(காங்கிரஸ்), 2023ல் இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்கிரஸ்) ஆகியோர் வென்றனர். 2025இல் இடைத்தேர்தலில் யார் மகுடம் சூட்டுவார்கள் என்பதை பிப்.8ஆம் தேதி தெரியும்.
வி.சி.சந்திரகுமார் 1987இல் திமுக வார்டு பிரதிநிதி, பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர், 2011இல் பிரிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியின் முதல் தேமுதிக MLAவாக பதவி வகித்தார். 2016ல் திமுக சார்பில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர்தென்னரசுவிடம் தோல்வியை தழுவினார். 2016 முதல் திமுக கொள்கை பரப்பு அணி மாநில இணை செயலாளராக உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இங்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இடைத்தேர்தலால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை 1077, 0424-2260211 என்ற எண்ணுக்கு அழைக்கவும். மேலும், 97917-88852 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.