India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக 5 பேரிடம் மொத்தம் ரூ.5,52,860 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணம் ஒப்படைக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட 3 பேரிடம், பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.3,30,860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்தை அவர்கள் இன்று பெற்றுக்கொண்டனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபியை சேர்ந்த சீதாலஷ்மி என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் சுயேட்சையாக ராஜசேகர், பானை மணி, முகமது கைபீர், கோபாலகிருஷ்ணன், இசக்கிமுத்து என 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், நூர்முகமது தனது 2-வது மனுவை தாக்கல் செய்தார்.
ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் அரச்சலூர் அருகே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உடலை கைப்பற்றிய அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைந்ததையடுத்து பிப்.5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காங்., போட்டியிடும் என கூறிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென திமுக போட்டியிடும் என்ற அறிவிப்பு ஈரோடு காங்., மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என கூறிவரும் நிலையில், 2024ல் கோவை மக்களவை தேர்தலில் எப்படி வெற்றி கண்டதோ, அதே பாணியில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியிலும் திமுக களம் காண்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாளை (ஜன.14) அறிவிக்கப்பட உள்ளார். அ.தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. போன்ற எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்து உள்ளதால், இருமுனை போட்டி மட்டுமே நடக்கும் நிலை காணப்படுகிறது.
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அவருக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், திரைப்பட நடிகர் அஜித்குமாருக்கும், அவரின் அணியினருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையயன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜன.13) காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. ஏற்கனவே 3 சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். திமுகவும், நாம் தமிழர் கட்சியும் 17-ல் மனுதாக்கல் செய்கின்றன. எனவே சுயே. வேட்பாளர்கள் மட்டும் இன்று மனுதாக்கல் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு, இரண்டாம் நாள் (ஜன.13) வேட்பு மனு தாக்கல், நாளை நடைபெற உள்ளது. முதல் நாளான ஜனவரி 10 நடைபெற்றது. இதில் 3 சுயேட்சைகள் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில், ஜனவரி 15 (திருவள்ளுவர் தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய இரு தினங்கள் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்புகள் ஆகியவை மேற்கண்ட இரு நாட்கள் மூடப்படும் என, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.