India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (ஜன.17) நிறைவடைகிறது. திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரையும் போலீசார் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், 2024 போலீஸ் ஸ்டேஷன்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக, 527 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்-சிறுமிகள்,பெண்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். குழந்தை விற்பனை தொடர்பான ஒரு வழக்கு, உ.பி.மாநிலத்துக்கு குழந்தையுடன் தாயை கடத்திச்சென்ற வழக்கு உள்பட, 31 சிறுவர்கள், 102 சிறுமிகள், 202 பெண்கள் 335 பேரை கடந்தாண்டில் மீட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 10 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் மட்டும், இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இறுதி நாளான இன்று திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். பகல் 11 மணிக்கு தொடங்கி, மதியம் 3 வரை வெட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என்று பிரதான கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியிருக்கும் நிலையில், திமுக, நாதக போட்டியிடுகின்றன. இந்நிலையில் களத்தில் யாருமே போட்டிக்கு உறுதிசெய்யப்படாத நிலையில், முதல் ஆளாய் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் சுழன்றடித்து 3 நாட்களாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்டுவருகிறார்.
ஈரோடு, கடம்பூர் மலைக்கிராமம், உகினியத்தை சேர்ந்தவர் ராஜப்பன் (49) விவசாயி. தனது காட்டில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளார். நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மக்காச்சோளக்காட்டிற்கு சென்றவரை, காட்டிற்குள் மறைந்திருந்த ஒற்றை யானை, தாக்கியதில் படுகாயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம், சத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்,5ல் நடக்கிறது. தொகுதியில் 109,636 ஆண் வாக்காளர்களும்,116760 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள்,37 பேர் மொத்தம், 226433 பேர் வாக்காளர்களாக உள்ளனர். கிழக்கு தொகுதி முழுவதும் அமைக்கப்பட்ட 237 ஓட்டுச்சாவடிகளில், 4 இடங்களில் உள்ள 9 ஓட்டுச்சாவடிகள், பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சிறுவலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனசேகரன் – பாலாமணி தம்பதி. இவர்கள் இருவரும் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் தனது குழந்தைகளான வந்தனா (10) மற்றும் மோனிஷா (7) இருவருக்கும், விஷம் கொடுத்துள்ளனர். இதில் ஆபத்தான நிலையில் குழந்தைகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை (ஜன 16) சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு இன்று வியாழக்கிழமை சென்று பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு, இரண்டாம் நாள் (ஜன.17) வேட்பு மனு தாக்கல், நாளை நடைபெற உள்ளது. இதற்கு முன் ஜனவரி 10 மற்றும் 13 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. இதுவரை 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், திமுக மற்றும் நாதக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலை, விடுதலை-2 திரைப்படங்களின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு, பாராட்டு விழா, ஈரோடு பெரியார் மன்றத்தில் நாளை (ஜன 17) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், நடத்தப்படும் இந்த விழாவில், திருமுருகன் காந்தி, ப.பா.மோகன், வி.பி. குணசேகரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.