India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர்- ஈரோடு அருகே நேற்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநர் மாரசாமி, நடத்துனர் துரைசாமி 2 பேர் மீதும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2 பேரும் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறை முன் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும் 8ஆம் தேதி, ஈரோடு தாலுகா தவிர மற்ற, 9 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் நடக்க உள்ளது. பெருந்துறை – நல்லாம்பட்டி,மொடக்குறிச்சி – ஈஞ்சம்பள்ளி, கொடுமுடி – நாமகநாயக்கன்பாளையம், கோபி – புதுக்கரைபுதுார் நஞ்சை கோபி,நம்பியூர் – குருமந்துார்,பவானி – சிங்கம்பேட்டை 1, படவல்கால்வாய் கிராமம், அந்தியூர் – பிரம்மதேசம் 2, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி.
சத்தியமங்கலம் வட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலமாக மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் வரும் பிப்.13 மூலக்கிணறு KNR திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் விஞ்ஞானிகள் மற்றும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுனர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆகவே அனைத்து விவசாயிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெருந்துறை அருகே பள்ள கவுண்டம்பாளையத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அமைச்சர் முத்துசாமி, நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாலை 6 மணியை கடந்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடக்கும் மையத்திற்கு, மாலை 6 மணிக்கு முன் வந்தவர்கள் மட்டும், வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பிற்பகல் 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 5 மணி நிலவரப்படி 64.02 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது. இத்தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரப்பன் சத்திரம் வாக்குச்சாவடியில், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு திமுகவினரும் திரண்டதால், இரு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.63 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது. இத்தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர் களத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.