Erode

News February 21, 2025

பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில்!

image

கோபி பாரியூரில் அமைந்துள்ளது, கொண்டத்துக்காளியம்மன் கோயில். மக்கள் வள்ளலாக போற்றும் கோபிசெட்டிப்பிள்ளானுக்கு, கொண்டத்துக் காளியம்மன் அருளினாலாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை, வழிபட்டால், குடும்ப பிரச்சனை, பில்லி சூனிய பிரச்சனைகள் தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.

News February 21, 2025

ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சமூக நலத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய, தகுதியான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட இணைய தள முகவரி, www.erode.nic.in இல் உரிய படிவம், பணியிடம், தகுதி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்து ‘மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், 6வது தளம், ஈரோடு – 638 011,என்ற முகவரியில் வரும், 25 தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள்.

News February 21, 2025

ஈரோட்டில் 26 மையங்களில் நாளை என்.எம்.எம்.எஸ் தேர்வு

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில், 2024-25ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நாளை நடக்கிறது. மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் நடக்கும் தேர்வில், 6,720 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்துள்ளனர்.

News February 21, 2025

ஈரோடு அருகே இளைஞர் கைது

image

ஈங்கூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன் சுரேந்தர் வயது 24. இவர் கோவையில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். முன்விரோதம் காரணமாக, சென்னிமலை சேர்ந்த 16 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் பெற்றோர்கள், போலீசில் நேற்று புகார் அளித்தனர். பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர்.

News February 21, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.21) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்களில் செவிலியர், டெய்லர், கணினி ஆபரேட்டர், தட்டச்சர், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே வேலை வாய்ப்பு தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 21, 2025

மளிகை கடையில் புகையிலை விற்றவர் கைது

image

ஈரோடு, வீரப்பன்சத்திரம் எஸ்.ஜி.வலசு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று முன்தினம் போலீசார் அக்கடையில் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து, அங்கிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் கேசவன் (32) என்பவரை கைது செய்தனர்.

News February 21, 2025

ரூ.98 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி

image

பெருந்துறை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில், துடுப்பதி பிரிவுகளில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டன. எனவே
பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பகுதியான காஞ்சிக்கோவில் பிரிவு மற்றும் துடுப்பதி பிரிவில் ரூ.92 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சேலம் – கோவை 4 வழி தேசியநெடுஞ்சாலை வழியாக சென்று வந்த வாகனங்கள் சர்வீஸ் ரோடுகள் வழியாக செல்கின்றன.

News February 21, 2025

முழுநேர கிளை நூலக கட்டிடம் திறப்பு

image

சத்தியமங்கலத்தில் உள்ள முழுநேர கிளை நூலகம், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த முழுநேர கிளை நூலக கட்டிடத் திறப்புவிழா நாளை நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு ஈரோடு மாவட்ட நூலக அலுவலர் இரா.யுவராஜ் தலைமை வகிக்கிறார். சத்தியமங்கலம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ஜானகி, விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.

News February 20, 2025

ஈரோட்டில் நாளை 105 வாகனங்கள் ஏலம் 

image

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 சக்கர, இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 105 வாகனங்களின் பொது ஏலம், ஆனைக்கல்பாளையத்தில் நாளை (பிப்.21) நடக்கிறது. ஏலம் எடுப்பவர்கள், காலை 8 மணி முதல் 10 மணிக்குள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.2,000, 4 சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 முன்பணமாகவும், ஏலம் எடுத்தவுடன் முழுபணத்தை செலுத்த வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் அறிவித்துள்ளார்.

News February 20, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க!

image

அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 77 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.

error: Content is protected !!