India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு: கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஈரோடு தனியார் நிறுவனம், பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவன அசையா சொத்துக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26, 27ல் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து ஏலத்தில் பங்கேற்கலாம்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அமைந்துள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
அந்தியூர், மாத்தூரை சேர்ந்தவர் பூவிழி கண்ணன்(28). தனியார் பஸ் கண்டக்டர். ஈரோட்டில் இருந்து தளவாய்பேட்டை வரை பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பஸ்சில் வந்த, பவானியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து மானவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் படி, போலீசார் அவரை கைது செய்தனர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, ஈரோடு மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்கப்பட உள்ளது. கடன் தொகையில் 30% மூலதன மானியம், 3% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ (அ) 0424-2263227 என்ற எண்ணை அழைக்கலாம்.
சத்தியமங்கலம் வட்டம், சதுமுகை ஊராட்சி, சின்னட்டிபாளையம் – தொன்னேரங்கனூர் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் மகள் C.சினேகா. இவர் சீனியர் நேஷனல் கபடி போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டு (24-25) ஆண்டுக்கான ஈரான் நாட்டில் நடைபெறும் ஆசிய பெண்கள் சாம்பியன்ஸ் பயிற்சி கபாடி முகாமில் கலந்து கொள்ள உள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி வியாபாரிகள் திமுக கவுன்சிலர் அத்துமீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மற் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் திமுக கவுன்சிலரை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் புகைப்படத்தை , கோவையில் பொறியாளராக பணிபுரிந்து வந்த சுரேந்தர் (24) என்பவர் ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சுரேந்தரை பிடித்து அவர் மீது போக்சோ, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்தியூர்எம் எல்ஏ ஏஜி வெங்கடாசலம், டி.என்பாளையம் பகுதி வழியாக சென்றபோது, எரங்காட்டூர் பிரிவு பகுதியில் கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கு வரும் வழியில் சாலை விபத்தில் சிக்கியதை அறிந்து, உடனடியாக தனது வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவிச் சிகிச்சைக்காக சேர்த்தார்.
ஈரோடு, திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில். இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும், வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. மேலும், 2 எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்து சென்று, நறுக்கி வீட்டின் 4 பக்கங்களிலும் வீசினால், துஷ்டர்களாளும் எதிரிகளாலும் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
Sorry, no posts matched your criteria.