Erode

News February 24, 2025

இபிஎஸ்யிடமே கேளுங்கள்: செங்கோட்டையன்

image

கோபிசெட்டிபாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், ‘ஆடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது’ என இபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.

News February 24, 2025

கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

image

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மேட்டுக்கடை தங்கம் மகாலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்எல்ஏக்கள் சந்திரகுமார், வெங்கடாசலம், கலெக்டர் ராஜகோபால்சுன்கரா கலந்து கொண்டனர்.

News February 24, 2025

இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்

image

ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா போஸ்டரில் எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் தவிர்த்தார். ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் எடப்பாடி பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பெயரை செங்கோட்டையன் தவிர்த்தார்.

News February 24, 2025

நம்பியூரில் தற்கொலைக்கு முயன்ற பெண் பலி

image

நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூரைச் சேர்ந்தவர் ரேவதி (37). இவரது கணவர் குணசேகரன் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் மது குடிக்கும் பழக்கத்தால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ரேவதி, வீட்டில் வைத்திருந்த பிரசர் மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 24, 2025

 பைக் – லாரி மோதி ஒருவர் பலி

image

சத்தி, டி.ஜி புதூர் நால்ரோட்டை சேர்ந்த சஞ்சய் (23), என்பவர் புளியம்பட்டி உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது செண்பகப்புதூர் அருகே கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக லாரியும் – பைக்கும் மோதியதில் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சஞ்சய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லாரி ஓட்டுனரிடம் விசாரணை.

News February 23, 2025

தாளவாடி அருகே குட்டையில் விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

image

தாளவாடி அருகே இக்கலூர் குட்டையில் அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடப்பதாக தாளவாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடலை சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் அவர் தாளவாடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி(64) என்பது தெரியவந்தது. இது குறித்து ஆசனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2025

பச்சமலை முருகன் கோயில்!

image

ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள பச்சமலை என்ற சிறிய குன்றில், புகழ்பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. வேண்டுவோருக்கு, வேண்டுவன தந்து, அருள்பாளிக்கும் இளம் குமரனை, துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்தாராம். அனைத்து தடைகளையும் போக்கும் சர்வ வல்லமை கொண்ட, பச்சமலை முருகனை வழிபட்டால், திருமணமாகி, நீண்ட நாட்களாக குழந்தைப்பெறு கிட்டாமல் இருப்பவர்களுக்கு, நிச்சயம் குழந்தை வரம் கிடைக்குமாம்.

News February 23, 2025

ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை: அமைச்சர் பதில் 

image

தெருநாய் மற்றும் விலங்குகளிடம் இருந்து ஆடுகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, மாதிரி கால்நடை பட்டி, ஈரோடு பெரியார் நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாதுகாப்பு அம்சம் குறித்தும், ஆடு வளர்ப்பாளர்களுக்கு இந்த பட்டி பயன் உள்ளதாக இருக்குமா? என்பது குறித்தும், அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின் விரைவில் கால்நடைக்கான இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.

News February 23, 2025

பெண்கள் ரயில் பெட்டியில் ஏறிய 47 பேர் கைது 

image

ஈரோடு, தமிழகம் முழுவதும் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்கள் வந்து நின்றதும் பெண்கள் பெட்டியில் பாதுகாப்பை உறுதி செய்திடவும், பெண்களுக்கான பிரத்யேக பெட்டியில் பயணிக்கும் ஆண்களை கைது செய்திட, ரயில்வே டி.ஜி.பி., வன்னியபெருமாள் உத்தரவிட்டார். இதன்படி ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பெண்கள் பெட்டியில் ஏறி பயணித்த, 47 ஆண்களை கைது செய்துள்ளதாக, ஈரோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

News February 23, 2025

வண்டல் மண், களி மண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 380 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக, இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து, ஈரோடு மாவட்ட அரசிதழ்களில் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீர்நிலைகளிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வண்டல் மண் எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

error: Content is protected !!