Erode

News February 26, 2025

போஸ்ட் ஆபிஸில் விபத்து காப்பீடு பதிவு சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், விபத்து காப்பீடு பதிவு செய்யும் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாமானது, பிப்ரவரி 28ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே பொதுமக்கள் அவரவருக்கு பொருத்தமான விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் தெரிவித்துள்ளார்.

News February 26, 2025

புகையிலை பொருள்கள் விற்பனை செய்த பெண் கைது

image

ஈரோட்டில், புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க, மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கே.ஏ.எஸ்.நகர் முதல் வீதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில், பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், 117 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும்  கடை உரிமையாளர் அனிதா என்பவர் மீது வழக்குப்பதிந்து, செய்து கைது  செய்தனர்.

News February 25, 2025

ஈரோடு: பவளமலை முருகன் கோயில்!

image

கோபியில் உள்ள பவளமலை என்ற சிறிய குன்றில், புகழ்பெற்ற முத்துகுமாரசாமி கோயில் உள்ளது. பச்சமலை முருகனை பிரதிஷ்டை செய்த, துர்வாச முனிவர் தான், பவளமலை முருகனையும் பிரதிஷ்டை செய்தாராம். பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர், பவளமலையில் தரிசனம் செய்வதன் மூலம், செவ்வாய் தோஷம் நீங்குகிறதாம். செவ்வாய் கிழமையில் பவளமலை ஆண்டவனை வழிபட்டால், நினைத்தது நடக்குமாம்.

News February 25, 2025

ஈரோட்டில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஈரோட்டில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

News February 25, 2025

மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை

image

ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மகா சிவராத்திரி விழா புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு பிப்ரவரி 27 -ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மஞ்சள் வர்த்தகம் மற்றும் ஏலம் நடைபெறாது. பிப்ரவரி 28- ஆம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

ஈரோட்டில் சதம் அடித்த வெயில்

image

நடப்பாண்டில் முதல் முறையாக ஈரோட்டில் நேற்று வெயில் சதம் அடித்தது. தமிழகத்தில் பொதுவாக ஏப்., மே தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் அதாவது 100 பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக ஈரோட்டில் வெயில் சதம் அடித்தது குறிப்பிடதக்கது.

News February 24, 2025

விசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் பிப் 2025ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கோவையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள்<> இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

ஈரோட்டில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

image

ஈரோட்டில் சோலாரில் முதல்வர் மருந்தகம் திறக்கபட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஈரோடு மாநகராட்சி மேயர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

News February 24, 2025

ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை

image

ஈரோட்டில் நடத்தப்படும் மஞ்சள் சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மஞ்சள் கொள்முதல் செய்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமையும், அரசு விடுமுறை நாட்களும் மஞ்சள் சந்தை நடைபெறாது. இந்நிலையில் பிப்.27 சிவராத்திரியை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!