India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 108 தேர்வு மையங்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,071 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு மாவட்டத்தில் மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு வேளாண் அதிகாரிகள் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு, 733.44 மி.மீ., நடப்பாண்டு கடந்த, 28 வரை, 7.52 மி.மீ., பெய்துள்ளது. பல்வேறு நிலைகளில் பாசனப்பணி நடந்து வரும் நிலையில், வேளாண் விரிவாக்க மையங்களில் வினியோகம் செய்வதற்காக நெல் விதை, 261.4 டன், சிறுதானியங்கள், 28 டன், பயறு வகை, 13 டன், எண்ணெய் வித்துக்கள், 49 டன் என, 351.4 டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாநகர் மட்டுமின்றி கிராமங்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள், மனிதா்கள், ஆடு, மாடு, கோழிகளை கடிக்கின்றன. ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் நாய் கடிக்காக 550 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பிப்ரவரி மாதம் 230 பேர் நாய் கடிக்கான சிகிச்சை பெற்றுள்ளனர். மொத்தம் 780 பேர். இங்கு போதிய எண்ணிக்கையில் நாய் கடிக்கான மருந்துகள் உள்ளன என்றனர்.
ஊராட்சிக்கோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த பணிகள் முடிந்த பிறகு குடிநீர் சீராக வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 15ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம். 0424 2275860, 9499055942 தொலைபேசி எண் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <
கோபி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்தியன் தலைமையிலான காவல்துறையினர் மொடச்சூர் செங்கோட்டையன் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செந்தில், சரவணன், சுரேஷ், முருகன், பாலாஜி, மனோகரன், ஆறுமுகம் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.6,770 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஏரி, குளம், குட்டைகளில் விவசாயிகள், மண் பாண்டம் செய்வோர் வண்டல் மண் எடுக்க அந்தந்த பகுதி வட்டாட்சியரை அணுகி அனுமதி பெறலாம். அனுமதி வழங்கப்பட்டவை தவிர பிற ஏரி, குளம், குட்டைகளில் இருந்து மண் எடுக்க விவசாயிகள் விரும்பினால், உரிய விவரத்துடன் விண்ணப்பித்தால், அரசுக்கு அனுப்பி அனுமதி பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.
ஈரோடு : கோடை வெப்ப தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தண்ணீர், அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு ஆகியவற்றை பருகலாம்.பருவ பருகலாம்.பருவ தர்பூசணி முலாம்பழம் நுங்கு மற்றும் வெள்ளரி ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 77 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்
Sorry, no posts matched your criteria.