India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மகேஷ்பாபு (30). நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுனராக இவருக்கு அந்தியூரைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் அப்பெண்ணை பார்க்க வீட்டிற்கு சென்ற போது அப்பெண்ணின் 11 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து தாய் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தில் மகேஷ்பாபுவை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன் நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், 2200 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்திருக்கிறோம். அது போதிய அளவில் இல்லை. மார்ச் இறுதிக்குள் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதத்திற்குள் 4,000 பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்தார்.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. ஈரோட்டில் 102.56 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக வெயில் பதிவான மாவட்டங்களில் ஈரோடு முதலிடத்தை பிடித்து இருப்பது, ஈரோடு மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டில் கடந்த ஆண்டு மாநிலத்திலேயே அதிகமான வெயில் பதிவாகி வரலாற்றில் இடம் பிடித்தது. இந்த ஆண்டாவது வெயிலின் தாக்கம் குறைவாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் இருந்து வரும் நிலையில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. நேற்று 102 டிகிரி வெயில் பதிவாகி இருப்பது மக்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு தினமும் காலை 6 மணிக்கு முன்பதிவு இல்லாத ரயில் (56108) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மார்ச் 8, 9, 11, 15, 16 ஆகிய நாட்களில் திருப்பத்தூர் வரை இயக்கப்படும். இதேபோல் ஜோலார்பேட்டை – ஈரோடு ரயில் (56107) அதே நாட்களில் திருப்பத்தூரில் இருந்து புறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் மாவட்ட கண்காணிப்பு பிரிவில் இளம் நிபுணர் ஆட்சேர்ப்பு(சிறப்பு திட்டங்களை செயல்படுத்தல் துறைக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் மாதம் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.3.25 ஆகும். <
ஈரோட்டில் அமைச்சர் கோவி செழியன், அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேற்று சிக்கய்யா நாயக்கர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவி செழியன் பேசுகையில், கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்நிலையில், முதலமைச்சர் ஒப்புதல் பெற்று ஈரோட்டில் கலைஞர் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை அனுவாவியில் மலையின் மையப் பகுதியில், இயற்கை எழிலுடன் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோயிலில் முருகப்பெருமான், சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு திருமணத் தடை உள்ளவர்கள் சாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் 5 செவ்வாய்களில் வழிபாடு செய்கிறார்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால். வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் பாதுகாக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு, பிளஸ் 1 பொதுத்தேர்வினை 108 மையங்களில் 24,257 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் மார்ச் 5ல் தொடங்கிய இத்தேர்வு வருகிற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் 223 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 23,877 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்கள் 380 பேர் என மொத்தம் 24,257 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.