Erode

News March 16, 2025

தாளவாடி அருகே கார் விபத்தில் இருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கோழிப்பாளையத்தில் நேற்று இரவு மைசூரில் இருந்து திருமண விழாவிற்காக 5 பேர் காரில் வந்திருந்தனர். திருமண விழாவில் இருந்து தேநீர் அருந்துவதற்காக புழிஞ்சூர் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். 3 பேர் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News March 16, 2025

ஈரோடு: கலெக்டர் எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், நிலுவை மற்றும் நடப்பாண்டு வரி இனம் மற்றும் தொழில் உரிம கட்டணத்தை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும். இதனை ஊராட்சி அலுவலகம், வரி வசூல் முகாம்கள், https://vptax.tnrd.gov.in என்ற போர்டல் மூலம் வரி செலுத்தி ரசீது பெறலாம். வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை மற்றும் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுமென கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

ஈரோடு: ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம்!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதை மற்ற இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 16, 2025

ஈரோடு: விதை விற்பனைக்கு தடை

image

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், விதை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். மொத்தம் 24 விதை விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து ரூ.20,85,970 மதிப்பிலான 44,320 கிலோ விதையை, விற்பனை செய்ய தடை விதித்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

News March 16, 2025

ஈரோட்டில் கண்டிப்பாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில். திண்டல்மலை வேலாயுதசாமி கோயில். சத்தியமங்கலம், பண்ணாரி மாரியம்மன் கோயில். சென்னிமலை முருகன் கோயில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில். அந்தியூர் பத்ரகாளியம்மன்கோயில். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில். தவளகிரி முருகன் கோயில். பச்சமலை முருகன் கோயில். பவளமலை முருகன் கோயில். அந்தியூர் மலைக்கருப்பசாமி கோயில். இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்.

News March 16, 2025

யூரியாவை பதுக்கியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

image

சித்தோட்டில் கடந்த மாதம், மத்திய அரசின் சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1,85,020 கிலோ யூரியா, 5 லாரிகளை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைதான பவானியைச் சேர்ந்த அகமது அலியை, குண்டர் சட்டத்தில் கைது செய்து, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

News March 16, 2025

ஈரோட்டில் நாளை வைட்டமின் ஏ திரவம் வழங்கல்!

image

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது. மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட, 1,30,956 குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் திரவம் வழங்கப்படுகிறது. நாளை தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. வைட்டமின் ஏ திரவம், குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.

News March 15, 2025

ஈரோடு போலீசார் எச்சரிக்கை 

image

ஈரோடு, கோபியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் முகநூலில் மதங்களுக்குள் மோதல் ஏற்படுத்தும் விதமாக பொய்யான வதந்திகளை பதிவிட்டு மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இது போன்று சமூக ஊடகங்களில் மத கலவரத்தையும், ஜாதி கலவரத்தையும் தூண்டும் உள்நோக்கத்துடன் பொய்யான வதந்திகளை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

News March 15, 2025

கருங்கல் வைத்து கொடூர கொலை?

image

பவானியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி கரையோரப் பகுதியில் உடல் முழுவதும் கருங்கல்லை கட்டிய நிலையில் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீாசர், இதுகுறித்து விசாரணை செய்ததில் இறந்தவர் மதியழகன் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், விசாரணை செய்து வருகின்றனர்.

News March 15, 2025

வேலை வாய்ப்பு முகாம்: இன்று மிஸ் பண்ணிடாதீங்க

image

ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மார்ச்.15ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேபட்ட நிறுவனங்களில் மொத்தம் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ள. இதில் 8, 10, 12, டிகிரி,டிப்ளமோ, நர்சிங் முடித்தவர்கள் என அனைவரும் பங்கு பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் Share பண்ணுங்க

error: Content is protected !!