India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னிமலை, மலையடிவாரத்தில் உள்ள வாரச்சந்தை பேட்டையில், திருநகர் காலணியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி கணேசன் என்பவர் இரத்தக்காயங்களுடன் பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக சென்னிமலை போலீசார், கணேசன் உடன் மது அருந்திய இருவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும், கொலைக்கான காரணம் என்ன என்பதும் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் முன்னுரிமையுடைய குடும்ப அட்டை உறுப்பினர்கள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை வரும் 31ம் தேதிக்குள் அந்தந்த ரேஷன் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, ஈரோடு மக்களே மிஸ் பண்ணிடாதீங்க. ரேஷன் அட்டை முக்கியம். ( Share பண்ணுங்க)
ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Sc, Diploma, ITI, MBBS, Nursing முடித்தர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியம் ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும். <
ஈரோட்டில் வாடகை செலுத்தாத மாநகராட்சிக்கு சொந்தமான 31 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 203 கடைகளில் ரூ.2கோடியே 23 லட்சம் அளவுக்கு வாடகை நிலுவை உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள 31 கடைகளுக்கு மாநகராட்சியின் ஆணையாளர் உத்தரவின் பேரில் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஈரோடு எழுமாத்தூரைச் சேர்ந்தவர்கள் குமார்-பாண்டிச்செல்வி தம்பதி. இவர்களது ஒன்றரை வயது குழந்தை, கடந்த 15ஆம் தேதி உயிரிழந்தது. குழந்தை இறப்பில் சந்தேகமடைந்த பாண்டிச்செல்வி, மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தை தன் ஜாடையில் இல்லாததால், குமார் தனது குழந்தையை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் குமாரை கைது செய்துள்ளனர்.
பவானி ஊராட்சிக்கோட்டை கதவணை நீர்மின் நிலையம் அருகே காவிரி ஆற்றில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் கடந்த 13-ஆம் தேதி மீட்கப்பட்டது. பவானி போலீஸ் விசாரணை நடத்தியதில், அவர் பவானியைச் சேர்ந்த மதியழகன் (30) என தெரியவந்தது. மதியழகனை கொலை செய்தது அவனது தாய் மற்றும் சகோதரர் மற்றும் மூன்று நண்பர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பவானி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில்,மட்டும் 108 கிலோ கஞ்சாவும்,35 பேர் கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டனர். இதில் ஈரோடு ரயில் நிலையத்தில் நாளொன்றுக்கு 200 பேருக்கும் மேல் சென்று வருகின்றனர்.கஞ்சாவை வெளிமாநிலங்களிலிருந்து, கேரளா பகுதியிலிருந்து கொண்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மதுவிலக்கு மற்றும் அமலகத்துறை போலீசார் தீவிர வேட்டை நடத்தினர். 108 கிலோ கஞ்சா, 35 பேரை கைது செய்தனர்.
தமிழ்நாடு வன துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் முடிந்தது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஈரோடு வன சரக ஊழியர்கள், தன்னர்வலர்கள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 5 வன சரகங்களில் 29 இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. வெள்ளோடு, கனகபுரம், அரச்சலூர்,பர்கூர்,அந்தியூர், சென்னம்பட்டி இதில் மொத்தம் 29 இடங்களில் நில வாழ் பறவைகள் கண்டறிய பட்டுள்ளன.
ஈரோட்டைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிச்செல்லி. இவர்களது குழந்தை கடந்த 15ம் தேதி பேச்சு, மூச்சின்றி திடீரென மயங்கி விட்டது. மருத்துவமனையில் சேர்த்ததில், குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாண்டிசெல்வி புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் குழந்தையை கொன்றது குமார் என தெரிந்தது. குழந்தை என் ஜாடையில் இல்லை என கொன்றதாக குமார் வாக்குமூலம் அளித்தார்.
ஈரோட்டில் நாளை(மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை நீங்கலாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 1,30,956 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் பெற்று பயனடையுமாறு கேட்டுகொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.