Erode

News September 27, 2024

தாறுமாறக ஓடிய லாரி: சுட்டுபிடித்த போலீஸ்

image

திருச்சூரிலிருந்து பள்ளிபாளையம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று 7 நபருடன் வந்து கொண்டிருந்தது. அப்போது, லாரி பல்வேறு இடங்களில் மோதி நிற்காமல் சென்றது. இதனையடுத்து விரட்டிய போலீசார், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும், லாரியில் ரூ.65 லட்சம், பயங்கரம் ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

News September 27, 2024

2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

தாளவாடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வெங்கடசாமி மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலராக இளங்கோவன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் 2 நாட்களுக்கு முன் தனிப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இருவரும் தாளவாடியில் சூதாட்ட கும்பலிடம் பணம் வாங்கி பிரித்து கொண்டது தெரிய வந்தது. எனவே 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

News September 27, 2024

அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா அறிவிப்பு

image

ஈரோடு, கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகஸ்தூரி அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் நடப்பாண்டு பிரம்மோத்சவ தேர்த்திருவிழா, அக்டோபர் 5ஆம் தேதி துவங்குகிறது. இதில், தினசரி யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறஉள்ளது. மேலும் அக்.11ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் நிகழ்வான தேரோட்டம், அக்.12ஆம் தேதி காலை நடைபெறுகிறது.

News September 27, 2024

ஈரோடு சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டு

image

தமிழகத்தில் சைபர் குற்றங்கள் தடுப்பு மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடித்தல் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் நேற்று சைபர் கிரைம் காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

News September 27, 2024

ஈரோடு மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்

image

ஈரோட்டில் உள்ள நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ பயின்ற ஆ.செங்கதிர் செல்வன் என்ற மாணவன் கால்நடை மருத்துவ பிரவில் தமிழக அரசின் 7.5% அடிப்படையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தற்போது சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வருகிறார். மாணவனை பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

News September 26, 2024

வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அறிமுகம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இனி அனைத்து இடுபொருட்களையும் விவசாயிகள் ஏ.டி.எம்., கார்டு மற்றும் யு.பி.ஐ., மூலம் எளிதில் பெற முடியும். முதன்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை 100 சதவீதம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பண பரிவர்த்தனை செய்ய வாய்ப்பில்லை என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 26, 2024

அஞ்சல் அலுவலகங்களில் விபத்து காப்பீட்டு சிறப்பு முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து 3 நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை (செப்.26) தொடங்குகிறது. தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகை தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மொத்தமாகவும் காப்பீடு பெறலாம். பணிபுரியும் அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைத்து விபத்துக் காப்பீடு பெறும் வசதி செய்யப்படும்.

News September 26, 2024

ஈரோட்டில் இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி

image

ஈரோடு, கொல்லம்பாளையத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், செப்.30ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News September 26, 2024

3 நாள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

image

ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பிரியா. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பிரியாவுக்கு கடந்த 7ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2ஆவது நாளில் குழந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து, சுவாச பிரச்சனை உள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில், உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குறைபாட்டினை சரி செய்துள்ளனர்.

News September 25, 2024

ஈரோட்டில் ஆட்டோவில் கிடந்த ஆண் சடலம்

image

ஈரோடு வ.உ.சி., பூங்காவில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று இரவு காய்கறி இறக்க சரக்கு ஆட்டோவில் மனோஜ்குமார் என்பவர் வத்துள்ளார். பின் இரவு அங்கேயே வாகனத்தை சாலையோரம் நிறுத்தி, ஆட்டோவில் படுத்து உறங்கி உள்ளார். இன்று காலை எழுந்து பார்த்த போது சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசர் விசாரணை.