India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களான விதை நெல், உளுந்து, மக்காசோளம், நிலக்கடலை மற்றும் உரங்கள் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. முன்பு ரொக்கமாக பணம் செலுத்தினர். இனி டிஜிட்டல் பேமெண்ட் முறையில் செலுத்தி பொருட்களை வாங்கி செல்லலாம் என உதவி இயக்குநர்(பொ) கற்பகம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணையில் உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் மழைப்பொழிவு ஏற்பட்டால் ஏரிகளில் நிரம்பி வெள்ளம், அந்தியூர் நேருவீதி கண்ணப்பன் கிணற்று வீதி பெரியார் நகர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்களுக்கு வருவாய்த்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு, திண்டல் யு.ஆர்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஈரோடு கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், இக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஈரோடு தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க 2016ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்து. பின் உள்ளாட்சி தேர்தலால் இந்த இணைப்பு செயல்படுத்தப்படாமல் இருந்தது. தற்போது, ஈரோடு மாநகராட்சியில் புதிதாகஎலவமலை, கதிரம்பட்டி, கூரப்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய 7 ஊராட்சிகள் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரி திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் தீயில் கருகி சேதமடைந்தது. போலீசார் அளித்த தகவலின் பேரில் பெருந்துறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் லாரி தீயில் எரிந்து சேதமானது.
தவெக-வின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஈரோட்டில் தவெக சார்பில் கொடிக்கம்பம் நடப்பட்டது. கட்சிக்கொடி ஏற்ற மாநகராட்சியில் கட்சி நிர்வாகிகள் அனுமதி கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கட்சி கொடி ஏற்ற முன்னேற்பாடுகள் நடந்த வந்த நிலையில், போலீசார் அங்கு சென்று உரிய அனுமதி இல்லாததால் கொடியேற்று விழாவை நடத்துவதற்கு தடை விதித்தனர்.
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, மீண்டும் கல்லூரியில் வந்து நிறைவு பெற்றது. மாரத்தான் போட்டியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் கலந்து கொண்டார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் தொடர்பான உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் லோக்சபாவில் 21 பேரும், ராஜ்யசபாவில் 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் லோக் சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே திமுகவினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று பெய்த மழையால் வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. எனவே இன்று காலை முதல் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே வரட்டுப்பள்ளம் வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர் செல்லும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் குற்ற வழக்கு தொடர்வு துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், காலியாக உள்ள ஒரு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பத்தினை https:// erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் செப்.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.