Erode

News March 25, 2024

சத்தியமங்கலத்தில் பறந்த ராட்சத பலூன்

image

ஈரோடு மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலம் தாலுகா அலுவலக மாடியில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதி தேர்தல் அலுவலர் உமாசங்கர், தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

News March 25, 2024

ஈரோடு எம்.பி கணேசமூர்த்திக்கு   தீவிர சிகிச்சை

image

ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி கணேசமூர்த்தி(77) பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.

News March 25, 2024

செல்போனை பார்த்தால் போதும்

image

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை நடைபெறுவதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை கூகுள் மேப் உதவியுடன் கண்டறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வாகன நிற்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என கோயில் நிர்வாகத்தின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

News March 25, 2024

ஈரோடு : பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார்

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். எனவே ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 120 கண்காணிப்பு கேமரா போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

ஈரோடு : ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார்

image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். கோபியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, பேசுகையில் கோவையில் அண்ணாமலை வெற்றி பெற ஒரு ரூபாய் செலவு செய்ய மாட்டார் ஆனால் ஒரு சவரன் கொடுப்பார் என தெரிவித்தார். இதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி

image

ஈரோடு மக்களவைத் தேர்தல் பணியில் 10, 970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஓரிடத்தில் முதல் கட்ட பயிற்சி நடந்தது. கோபி சாரதா பள்ளியில் நடந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார்.

News March 24, 2024

ஈரோடு: 100 % வாக்களிக்க அறிவுறுத்தல்

image

மக்களவைத் தோதலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, மாநகராட்சி ஊழியா்கள் வீடுவீடாகச் சென்று வாக்காளா்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பிற பகுதியைச் சோந்த வாக்காளா்களை அவா்களது சொந்த ஊா்களுக்குச் சென்று தோதலின்போது வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். இந்நிகழ்வின்போது, சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், மாநகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.

News March 24, 2024

அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி 

image

ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பு அருகில் அதிமுக தேர்தல் பணிமனை அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக இருப்பதால் அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

News March 24, 2024

ஈரோடு: நாளை விடுமுறை அறிவிப்பு

image

பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நாளை நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக நாளை (26ம் தேதி), ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30ம் தேதி பணி நாளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.