Erode

News March 29, 2024

ஈரோடு வருகை தரும் முதல்வர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து  சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

News March 29, 2024

ஈரோடு: 80 கோயில்களில் திருவிழா

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.

News March 29, 2024

ஈரோடு தொகுதியில் 45 மனுக்கள் ஏற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 52 வேட்பு மனுக்களில் கூடுதல் மனுக்கள், வயது குறைவு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது என 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 45 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாளை இறுதி நாளாகும் .

News March 29, 2024

ஈரோடு: தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிப்பட்டி பகுதியில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி திருமண அழைப்பிதழை போல் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு கொடுத்து நூதன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் மேளம் இசைத்தபடியும் , பொம்மை வேடமிட்டும் 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் விழிப்புணர் ஏற்படுத்தினர்.

News March 29, 2024

ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரசாரம்

image

பெருந்துறையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்துக்கு ஆதரவாக  இன்று மாலை 6 மணி அளவில் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமாருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

News March 29, 2024

ஈரோட்டில் நீர்மட்டம் 53 அடியாக சரிவு

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையாகும். இதன் மொத்த நீர்மட்ட உயரம்
105 அடி, கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.32 அடி, நீர் இருப்பு 5.27 டி.எம்.சி, நீர் வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது . மேலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News March 29, 2024

வழிமறித்த காட்டு யானை – அலறிய பயணிகள்

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தலமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது சாலையின் நடுவே குறுக்கிட்டு பயணிகளை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒற்றை யானை திடீரென
சாலையில் நடுவே நின்று பேருந்தை வழிமறித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து முன் நின்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் தானாகவே சென்றது.

News March 29, 2024

ரூ.1.05 கோடி உண்டியல் காணிக்கை

image

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா நிறைவடைந்ததையடுத்து கோயில்களில் வைக்கப்பட்டிருந்த 15 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் ரா.மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோயில் துணை ஆணையர் சு.சுவாமிநாதன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு 96 ஆயிரம், 295 கிராம் தங்கம், 757 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

News March 28, 2024

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக

image

ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News March 28, 2024

மண்புழுவாய் பாடுபடும் நிர்வாகிகள்

image

பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றிய செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது மண்வெட்டியால் துண்டான போதிலும் இரண்டு துண்டுகளும் தனித்தனி புழுவாகி அதற்கு உண்டான வேலையை செய்வது போல் நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளரின் வெற்றிக்காக செயல்படுவார்கள் என்றார்