India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகைபுரிந்த விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவினர் பாலதண்டாயுதபாணி கோயிலில் பரிவட்டம் கட்டப்பட்டு சிறப்பு தரிசனம் செய்து பின் மேடைக்கு அழைத்து வந்தனர். மேலும் தேமுதிகவினர் விஜய பிரபாகரனுக்கு பூங்கொத்து கொடுத்தும் ரோஜா பூ மாலை மணிமகுடம் வைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மக்கள் நடமாட முடியாத வகையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் திடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ரவுண்டானா நடுப்பகுதியில் குவிந்ததால் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 5 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஈரோடு நகரமே ஸ்தம்பித்தது. வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போயினர்.
ஈரோடு மாநகர் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் எஸ் சி எஸ் டி மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும்.பஞ்சம் நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை தகுதியானவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெருந்துறை ஒன்றியம் , கூதாம்பி கிராமத்தில் விவசாயி தங்கராஜ் அவர்களது பட்டியில் இன்று நாய்கள் புகுந்து 27 ஆடுகளையும் குட்டிகளையும் கடித்துக் கொன்றுள்ளது. இதற்கு பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு பெற்று தரவும் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி கூதாம்பி ஆவரங்காடு பகுதியில் விவசாயிகள் திரண்டு இறந்த ஆடுகளை ரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படும் பவானிசாகர் அரசு தென்னங்கன்று நாற்றுப் பண்ணையில் பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை குட்டை ரகத் தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது, 53 ஆயிரத்து 140 கன்றுகள் விற்பனைக்கு தயராக உள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குனர் ப மரகதமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் திருக்கோயில்கள் சார்பில் ஈரோடு திண்டல் சைதயன்யா பள்ளி வளாகத்தில் 27 மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து வருகிறது. இந்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு இரு வழியாக பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். இதில் ஒரு வழி கடந்த ஓராண்டுக்கு மேலாக பூட்டி இருந்த நிலையில் தற்போது கதவு திறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இரு வழியாகவும் சென்று வர வசதியாக உள்ளது.
ஈரோடு, வெள்ளோடு கொம்மக்கோவில்அருகே பள்ளி வாகனமும், தனியார் கல்லூரி வாகனமும் மோதிய விபத்தில் 9 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 6 கல்லூரி மாணவர்கள் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு செய்யப்படாத, காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தொழில்மனைகளை பார்வையிட ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள கிளை மேலாளரை நேரிலோ அல்லது 94450 06562 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.