Erode

News April 9, 2024

வனத்துறையினர் கடும் எச்சரிக்கை

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலை ஓரங்களில் உலாவுகிறது. எனவே வனப்பகுதி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். வன விலங்குகளுக்கு தொந்தரவு தர கூடாது. சாலை ஓரங்களில் உள்ள வன விலங்குகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

News April 9, 2024

ஈரோட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.10) முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி போன்ற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

அந்தியூர்: ஓய்வெடுக்கும் அம்மன்

image

அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு அந்தியூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஆகிய நான்கு நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. இன்று நிலை நிறுத்தப்பட்டது. தேரில் பவனியில் மக்களுக்கு அருள் பாவித்த பிறகு இன்று தேர் நிலை சேர்ந்து பின்னர் ஆலயம் வந்து அம்பாள் ஒய்வு எடுக்கும் காட்சி வெளியானது. 

News April 8, 2024

ஈரோடு: பலத்த சூறைக்காற்று

image

தாளவாடி அருகே பாரதிபுரம் கிராமத்தில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் இன்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள், உரிய நிவாரணம் வழங்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

News April 8, 2024

ஈரோடு : ஏப்ரல் 15க்குள் இணையதள வசதி

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில், 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச் சாவடிகள் மற்றும் 1,125 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் இணையதள வசதிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

News April 8, 2024

ஈரோடு அருகே விழுந்து கிடந்த காட்டு யானை

image

சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட குரும்பூர் கிராம வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு யானை ஒன்று தள்ளாடிய நிலையில் நடக்க முடியாமல் விழுந்தது. இன்று காலை அப்பகுதிக்கு சென்ற மக்கள் யானை படுத்திருந்தது கண்டு கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்று உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

News April 7, 2024

50 ஆண்டுகளுக்கு பின் நெகிழ்ச்சி சம்பவம்

image

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1974 முதல் 1977ஆம் கல்வி ஆண்டுகளில் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பின் கல்லூரி வந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கோல்டன் ஜூப்ளி விழாவை இன்று கொண்டாடினர். இதற்கு கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். பின் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

News April 7, 2024

ஈரோடு: 94.74 % தபால் ஓட்டு

image

ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 2, 201 முதியோர்களும், 800 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3, 001 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். தபால் ஓட்டு வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 3, 001 பேரில், கடந்த 3 நாட்களிலும் மொத்தம் 2, 083 முதியோர்கள், 760 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என மொத்தம்  94. 74 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

News April 7, 2024

ஈரோடு: வீட்டுக்குள் துர்நாற்றம்: பரபரப்பு

image

சித்தோடு காளிங்கராயன்நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கிருஸ்ணா பாய் (68). குடும்ப பிரச்னை காரணமாக, இவரது கணவர் நந்தகுமார் காளிங்கராயன்நகரில் உள்ள வாடகை வீட்டிலும், கிருஷ்ணா பாய், ஜவுளி நகரில் உள்ள வீட்டிலும் தனியாக வசித்து வந்தனர். இரவு 11 மணிக்கு, நந்தகுமார் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. கதவை உடைத்து சென்று பார்த்தபோது, நந்தகுமார் இறந்து கிடந்தார்.

News April 7, 2024

தாளவாடி அருகே யானை அட்டகாசம் 

image

தாளவாடி அருகே திகினாரை கிராமத்தில் நஞ்சப்பர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு புகுந்த 3 காட்டு யானைகள் 250 க்கும் மேற்பட்ட வாழைகளை , மிதித்தும் தின்றும் சேதாரம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.