India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

நம்பியூர் அருகே கோசணத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் சண்முகம், தனது மனைவியுடன் கோவை சென்று திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 2.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE பண்ணுங்க!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
வேலை தேடும் யாருக்காவது நிச்சயம் இது உதவும் இந்த தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

கோபி அருகே அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர், பள்ளிச் சிறுமியை ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிறுவலூர் போலீசில் புகாரளித்ததால், ஆத்திரமடைந்த ராஜசேகர் மற்றும் அவரது தம்பி, சிறுமியின் வீட்டிற்கே சென்று அவர்களைத் தாக்கினர். இதில் ரத்தக் காயமடைந்த பெற்றோர் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.

சென்னிமலை வாரச்சந்தை எதிரே நேற்று மாலை முகாசி பிடாரியூரைச் சேர்ந்த மனோகரன் (64) என்பவர் நிறுத்தியிருந்த டிவிஎஸ் வாகனத்தை மர்ம நபர் திருடினார். இதைக் கண்ட மனோகரன், சற்றும் தாமதிக்காமல் மற்றொரு வாகனத்தில் திருடனை விரட்டிச் சென்று முத்தையன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட சேலம் எடப்பாடியைச் சேர்ந்த மணிவேல் (41) என்பவரை போலீசில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து வாகனம் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தோட்டத்தில் பனை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பனை மரங்கள் பல்வேறு மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. பல்வேறு கலைப் பொருட்கள், பதநீர் போன்றவற்றிற்காக மக்கள் பலர் இதனை சார்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் பனை மரங்கள் வெட்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி கடிதம் இல்லாமல் வெட்டக்கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் சி கந்தசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிவகிரி, வேட்டுவபாளையம், விளக்கேத்தி, காஸ்பாபேட்டை, வீரப்பம்பாளையம், செட்டிபாளையம், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, 68,80 வேலாம்பாளையம், பவானி நகர், ஊராட்சிக்கோட்டை, மைலம்பாடி, காளிங்கராயன்பாளையம், கூடுதுறை, சத்தி, பேருந்து நிலையம், உக்கரம், அரியப்பம், சிக்கரசம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.