India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்.!விபத்தின் போது உயிரிழப்பை தவிர்ப்போம்.!) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வடமதுரை ரயில் பாதை பராமரிப்பு காரணங்களுக்காக டிச-27 துவங்கி ஜன-3 வரையிலான செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோயில்- கட்சேகுடா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழித்தட மாற்றம், தொடர் விடுமுறையால் வழக்கம் போல் இயங்கும்.
வடமதுரை ரயில் பாதை பராமரிப்பு காரணங்களுக்காக டிச-27 துவங்கி ஜன-3 வரையிலான செங்கோட்டை மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ், குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோயில்- கட்சேகுடா எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் – கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழித்தட மாற்றம், தொடர் விடுமுறையால் வழக்கம் போல் இயங்கும்.
திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 24 இருசக்கர, 2 மூன்று சக்கர, 2 நான்கு சக்கர வாகனங்கள் வருகின்ற டிச.27 அன்று சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க முன் பணத்தொகையாக ரூ.1000 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளவும். அனுமதி சீட்டு திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வருகிற டிச.24, 25 மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 25 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தில் சேதாரங்கள் நீக்கி, 192.984 கிலோ தங்கத்தை உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யும் நிகழ்ச்சி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பழநியில் நடைபெற்றது. அப்போது, 20 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ. 136 கோடி மதிப்பிலான தங்க நகைகள் சீல் வைக்கப்பட்ட 20 பெட்டிகளில் போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்று 21-12-2024 இரவு 11.00 மணி முதல், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி வரை, காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் பழனிரோடு பாலம்ராஜக்காபட்டி அருகே இன்று (டிச.21) இரு சக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கதிரையன்குளம் சில்வார்பட்டியை சேர்ந்த வீர சுந்தரலிங்கம்(26) என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பணத்திற்காக உங்களது வங்கி கணக்கை விற்காதே. அதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்யப்படும். எச்சரிக்கை) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை, திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கலில் வருகிற 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ,காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை, பழைய நீதிமன்ற வளாகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், மருத்துவ உதவியாளர் பி.எஸ்.சி. நர்சிங் அல்லது GNM, ANM,DMLD முடித்திருக்க வேண்டும். விவரங்களுக்கு 044 -28888060 ,044-28888075.
Sorry, no posts matched your criteria.